தமிழக போலீசார் 13 பேர் உட்பட 26 பேருக்கு ஜனாதிபதி விருது
சென்னை: வீரதீர செயல்கள் புரிந்து, சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக காவல் துறையை சேர்ந்த 13 பேர் உள்பட 26 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணிபுரிந்து, நாட்டு மக்களுக்கு சேவை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு ஜனாதிபதி விருதுகளை அறிவித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான ஜனாபதி விருது பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதில் தமிழக காவல் துறையை சேர்ந்த 13 பேர் உட்பட 26 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் விபரம்:
காவல்துறையினர்...
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த போது சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போதைய சென்னை போலீஸ் கமிஷ்னர் டி.ராஜேந்திரன் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இவருடன் கோவை சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், சென்னை பிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் டி.சந்திரபாசு, சென்னை கூடுதல் எஸ்பி கருணாநிதி, சென்னை சிபிசிஐடி துணை சூப்பிரண்டு பாலு, சென்னை புறநகர் உதவி கமிஷனர் டி.அசோக் ஆகியோரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இவர்களை தவிர்த்து இன்ஸ்பெக்டர்கள், எஸ்.கண்ணன்(திருச்சி டவுன்), ராஜேந்திரன்(தர்மபுரி), பி.கோவிந்தசாமி (திருச்சி), கண்ணன் (நாகர்கோவில்), வெங்கடேசன் (கடலூர் லஞ்ச ஒழிப்பு), சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு சிறப்பு விசாரணை மையத்தின் இன்ஸ்பெக்டர் பரமசாமி, ராமநாதபுரம் ஆயுதப்படை எஸ்ஐ தனசேகரன் ஆகியோர் இந்த விருதை பெறுகிறார்கள்.
சிபிஐ, சிஆர்பிஎப் சேர்ந்த 10 பேருக்கு...
சென்னை லஞ்ச ஒழிப்பு சிபிஐ இன்ஸ்பெக்டர்கள் கலைமணி கோபாலன், குமரேசன் கிருஷ்ணசாமி, கோவை மத்திய ரிசர்வ் போலீஸ் படை எஸ்ஐ ஹர்ஜிராம், சென்னை ஆவடி மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரி கமலபதி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சென்னை உதவி இயக்குனர் டி.மனோகரன், சென்னை ரயில்வே பாதுகாப்பு படையின் உதவி பாதுகாப்பு கமிஷனர் டி.டேனியல் ஜோசன் தாஸ், நெய்வேலி மத்திய தொழில்பாதுகாப்பு படை சீனியர் கமாண்டன்ட் சையது ஜபாருல்லா, சென்னை ஐசிஎப் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், எஸ்ஐ ஹரிலால் ஆகியோரும் சிறந்த பணிக்கான ஜனாதிபதி விருதுகளை பெறுகிறார்கள்.
சிறை துறையில் 3 பேருக்கு...
சிறை துறையில் சிறப்பாக செயல்பட்ட சென்னை சரக சிறைச்சாலைகள் டிஐஜி ஆர்.துரைசாமி, கோயம்புத்தூர் சிறைச்சாலை கூடுதல் சூப்பிரண்டு பி.கோவிந்தராஜன், கொக்கிரக்குளம் பெண்கள் சிறப்பு சப்-ஜெயில் தலைமை வார்டர் ஐ.சுப்புலட்சுமி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருவருக்கு...
புதுச்சேரியில் இரண்டு போலீசாருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு எஸ்.ராமராஜு, சிக்மா செக்யூரிட்டி இன்ஸ்பெக்டர் ராஜ கிருபாகரன் ஆகியோரும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications