செரிப்ரேட் கூட்டம் - சென்னை அருகே 4 நாள் விழா

Subscribe to Oneindia Tamil

செரிப்ரேட் என்ற பெயரில் ஆண்டுதோறும் நடைபெறும் சிந்தனையாளர்கள் மற்றும் சாதனையாளர்களின் சங்கமக் கூட்டம், 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை சென்னை அருகே நடைபெறவுள்ளது.

இந்த சங்கமத்தில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், சாதனையாளர்கள் கலந்து கொள்வார்கள். நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிழ்ச்சியில் பல் துறை விஐபிக்கள் பங்கேற்கிறார்கள்,.

இது ஒரு மாநாடு போல இருக்காது. கருத்துப் பரிமாற்ற சங்கமமாக இருக்கும்.

விளம்பரம், சட்டம், நாடகம், விண்வெளி அறிவியல், மீடியா, தொழில், கல்வி, சிறுதொழில், மார்க்கெட்டிங், போட்டோகிராபி, திரைப்படம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனையாளர்கள், சிந்தனையாளர்கள் இதில் கலந்து கொள்கின்றனர்.

தங்களது அனுபவங்கள், தாங்கள் சந்தித்த சவால்கள், எப்படி அதை சமாளித்தோம் என்கிற திரில் விஷயங்களை இதில் பங்கேற்பவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வார்கள்.

இதில் ஆடியன்ஸ் என்ற வார்த்தைக்கு இடமில்லை. இதில் பங்கேற்பவர்களே ஆடியன்ஸ் ஆவர். ஆக்கப்பூர்வமான விவாதங்கள், சிந்தனைகள், யோசனைகள் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.

தோல்விகளை வெற்றியாக மாற்றுவது எப்படி, வெற்றி பெறுவது எப்படி, சவால்களை உடைத்தெறிவது எப்படி என்பது குறித்து வாதங்களும் நடைபெறும்.

ஒவ்வொருவரின் வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொள்ள இது நல்ல கூடலாக அமையும்.

இந்த நான்கு நாட்களும் செல்போன் தொல்லையின்றி, டார்கெட்டை நிறைவேற்ற வேண்டுமே என்ற பரபரப்பின்றி, நிம்மதியாக, ஹாயாக, ஜாலியாக தங்களது நேரத்தையும், மனதையும் இங்கு செலவிடலாம்.

தற்போது செரிப்ரேட் தனது 3வது ஆண்டு கொண்டாட்டத்திற்கு வந்துள்ளது. இதற்கு முன்பு 2008ம் ஆண்டு கோவாவிலும், 2009ம் ஆண்டு கும்பல்கர் ரிசார்ட்டிலும் இந்தக் கொண்டாட்டம் நடந்தது.

2008ம் ஆண்டு நடந்த சங்கமத்தில் இயக்குநர் மிஷ்கின் பங்கேற்றார். 2009ல் நடந்த சங்கமத்தில் நடிகை ஆன்ட்ரியா கலந்து கொண்டார்.

2010ம் ஆண்டுக்கான கொண்டாட்டம், புதுச்சேரி அருகில் உள்ள பவுஞ்சூரில் அமைந்துள்ள மார்க் தபோவனில் நடைபெறவுள்ளது.

சென்னையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும், மகாபலிபுரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள பசுமை படர்ந்த அமைதியான சிற்றூர்தான் பவுஞ்சூர்.

இங்கு, 77 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வில்லாக்களுடன் கூடியதாக அமைந்துள்ளது மார்க்கின் தபோவன். இந்த அழகிய சூழலில்தான் 2010ம் ஆண்டுக்கான செரிப்ரேட் சங்கமம் நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+