அபுதாபி அய்மான் ச‌ங்க‌ த‌லைவ‌ருக்கு பிரிவு உப‌சார‌ விழா

Subscribe to Oneindia Tamil

அபுதாபி: அபுதாபி அய்மான் சங்கத் தலைவர் காதர் பக்ஸ் ஹாஜிக்கு பிரிவு உபசார விழா நடைபெறுகிறது.

அமீரகத்தில் செயல்படும் அய்மான் சங்கத்தை நிறுவியவர்களுள் ஒருவரும், சங்கத்தில் விடைபெறும் தலைவருமான காதர் பக்ஸ் ஹாஜி தனது 33 வருட அமீரக வாழ்வை நிறைவு செய்து தாயகம் திரும்புகிறார்.

அவரை பாராட்டி வழியனுப்பும் வகையில் பிரிவு உபச்சார விழா ஜனவரி 1ம் தேதி அபுதாபி ஹம்தான் சாலையில் அமைந்திருக்கும் ருசி ரெஸ்டாரன்ட் ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.

அய்மான் புதிய தலைவர் அதிரை சாஹுல் ஹமீது தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. சமுதாயப் புரவலர் நோபிள் ஹமீது ஹாஜியார், அபுதாபி தமிழ் சங்கம், துபை ஈமான் சங்கத்தினர் மற்றும் தொழிலதிபர்களும் பல்வேறு தமிழக மற்றும் கேரள அமைப்புகளின் பிரதிநிதிகளும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

அய்மானின் நிறுவனத் தலைவர்களான அப்துல் வஹ்ஹாப் ஹாஜியார், கனிமொழிக் கவிஞர் ஷம்சுதீன் ஹாஜி, கல்லூரிச் செயலளார் செய்யது ஜாபர், தொழிலதிபர் பனியாஸ் ஹமீத்
ஹாஜி, ஈமான் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி, பாடகர் தேரிழந்தூர் தாஜுதீன் உள்ளிட்ட‌ ப‌ல‌ரும் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+