ரியாத்தில் பொங்கல்-தமிழ்ப் புத்தாண்டுக் கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில், வளைகுடா செந்தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் மற்றும் தமிழப் புத்தாண்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஜனவரி 15ம் தேதி வளைகுடாச் செந்தமிழ்ச் சங்கம் சார்பாக 'பொங்கல்' மற்றும் 'தமிழ்ப் புத்தாண்டு' விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
உறியடித்தல், கபடி விளையாட்டு, மகளிர்க்கான விளையாட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டு, கோலப் போட்டி, குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி,பொங்கல் பண்டிகையின் சிறப்பை விளக்கும் நாடகம், கிராமிய நடனம், பட்டிமன்றம், கவியரங்கம், தமிழ்ச் சொல் விளையாட்டு முதலிய நிகழ்ச்சிகளில் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ந்து களித்தனர்.
வெற்றி பெற்ற அனைவருக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சமுதாயப்பணிக் குழுவின் சார்பாக 2010ம் ஆண்டில், தமிழ்நாட்டில் 2010 மரங்கள் நடுவதாக முடிவு செய்யப்பட்டு, முதல் கட்டமாகக் கோயம்புத்தூர் 'ஜீவகாருண்யம்' ஆசிரமத்தில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.













Click it and Unblock the Notifications