இருதய நோயை குறைக்கும் சாக்லேட்: அமெரிக்க ஆராய்ச்சி முடிவு
வாஷிங்டன்: சாக்லேட் பிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. வாரத்தில் 5 தடவை சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு சாக்லேட்டே சாப்பிடாதவர்களை விட 57 சதவிகிதம் குறைவாகவே இருதய நோய்கள் ஏற்படுகின்றது என்று ஒரு ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
பழஙகள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளுதல், குடும்பத்தில இருதய நோய் இருக்கிறதா உள்ளிட்டைவைகளையும் கணக்கில் கொண்டு தான் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சியில் 5000 அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர். வாரத்தில் 1 முதல் 4 தடவை சாக்லேட் சாபிட்டவர்களுக்கு இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு 26 சதவிகிதம் குறைவாக இருந்தது.
குறைந்த அளவில் சாக்லேட் சாப்பிட்டால் கூட இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
இது குறித்து வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வு பேராசிரியர் ஜானதன் ஹாட்க்சன் கூறியதாவது,
இந்த ஆராய்ச்சியின் மூலம் கொக்கோவில் உள்ள ப்ளாவனாய்ட்ஸ் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்ஸுக்கும் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறைவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆன்டிஆக்சிடன்ட்ஸ்கள் பழங்கள், காய்கறிகள் குறிப்பாக டீயில் உள்ளது. சாக்லேட்டில் உள்ள ப்ளாவனாய்ட்ஸ் நன்மை பயத்தாலும், அதில் உள்ள சாச்சுரேடட் கொழுப்பால் உடல் நலக்கோடு உண்டாகும்.
வாரத்தில் 20 முதல் 30 கிராம் சாக்லேட் சாப்பிடுவதால் ஒருவரின் சக்தி, சாச்சுரேடட் கொழுப்பு உட்கொள்ளுதல் ஆகியவற்றில் சிறிதளவு தான் தாக்கம் ஏற்படும்.
சாக்லேட் சாப்பிட்டால் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும் என்று சொல்வதற்கு முன் அதை போதிய அளவு சோதனை செய்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.