நெல்லையப்பர் கோவிலில் மகாருத்ர வேள்வி துவக்கம்
நெல்லை: நெல்லையப்பர் கோவிலில் உலக நன்மைக்காக மகா ருத்ர வேள்வி இன்று துவங்கியது.
நெல்லையப்பர் கோவிலில் 25 ஆண்டுகளுக்கு பிறகு உலக நன்மை வேண்டி கோடி அர்ச்சனை கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக சுவாமி நெல்லையப்பருக்கு அதிருத்ர மகா வேள்வி இன்று (12ம் தேதி) தொடங்கியது. வரும் 23ம் தேதி இந்த வேள்வி நிறைவடைகிறது.
அதிருத்ர மகா வேள்வியை முன்னிட்டு பாபநாசம் பொதிகை மலையில் இருந்து வேத விற்பன்னர்கள் மற்றும் பக்தர்கள் மூலம் எடுத்து வரப்பட்ட
புனித நீர் கலசம் சுவாமி சன்னதி தெப்பங்குளம அருகே உள்ள அங்குச விநாயகர் கோவிலில் இருந்து யானை காந்திமதி மீது ஊர்வலமாக
எடுத்து வரப்பட்டு ரதவீதிகளை சுற்றி கோயிலை அடைந்தது.இதில் பக்தர்கள் பேரவை காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் உபய திருப்பதி மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் புனித நீர் நிரப்பப்பட்ட கலசம் அதிருத்ர மகா வேள்வியில் வைக்கப்பட்டது. இன்று காலையில் வேள்வி துவங்கியது.
வரும் 23ம் தேதி காலையில் நெல்லையப்பருக்கு 1008 கலச அபிஷேகம், மாலை 4.30 மணிக்கு சுவாமி அம்பாள் திருகல்யாணம் நடக்கிறது.
இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் தங்க சப்பரத்தில் உலா வரும் வைபவம் நடக்கிறது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications