தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி?

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.
பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.
இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.
மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.












Click it and Unblock the Notifications