சபரிமலையில் தரிசன நேரம் நீட்டிப்பு : 18-ம் படி ஏறி தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக கடந்த 30-ம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
சபரிமலையில் மகர விளக்கிற்காக தினந்தோறும் லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள் தரிசனத்திற்காக பல மணி நேரம் நீண்ட வரிசையி்ல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சோர்வடையும் பக்தர்கள் தரிசனம் செய்யாமலேயே திரும்பி விடுகின்றனர். ஏற்கனவே கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக ஐயப்ப சாமியை தரிசிக்க அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்ட நடை மதியம் 2 மணி வரை நீட்டிக்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தின் காரணமாக தரிசன நேரம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் படி அதிகாலை 4 மணி முதல் மாலை 3 மணி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்பு மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11.50 மணி வரை தரிசனத்திற்கு நடையை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து பக்தர்கள் 18-ம் படி ஏறி ஐயப்ப சாமியை தரிசிக்க நேற்று முதல் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் 18-ம் படி ஏறிச் சென்று தரிசனம் செய்ய போலீசார் உதவி வருகிறார்கள்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications