பொங்கல் விடுமுறை: பாணதீர்த்த அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பாபநாசம், அகஸ்தியர் அருவி, பாணதீர்த்த அருவி, மணிமுத்தாறு அருவி பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வந்தனர். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென மழை பெய்ததால் பாபநாசம் பாணதீர்த்த அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.
எனினும் அணையில் இருந்து அருவிக்கு படகு போக்குவரத்து நடைபெற்றது. தொலைவில் இருந்தவாறு அருவியை ரசித்தனர். வனப்பகுதியில் மதுபாட்டில்கள் கொண்டு செல்வதை தடுக்கும் பொருட்டு பாபநாசம் வனத்துறை சோதனை சாவடியில் முண்டந்துறை புலிகள் காப்பாக இணை இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் விகேபுரம் போலீசார், ஊர்க்காவல் படையினர் சுற்றுலா பயணிகளிடம் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சிலரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அந்த பாட்டில்களை பாறையில் உடைத்து அழித்தனர். மது எடுத்து வந்தவர்களை வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.












Click it and Unblock the Notifications