சென்னையில் கின்னஸ் சாதனைக்காக 12 மணிநேர புராண நாடக நிகழ்ச்சி
சென்னை: கின்னஸ் சாதனைக்காக நாட்டுப்புற நாடக கலைஞர்களின் 12 மணிநேர புராண நாடக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ண கான சபா அரங்கில், கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து 12 மணிநேரம் நாட்டுப்புற நாடக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன் துவக்கி வைத்தார்.
விழுப்புரத்தை சேர்ந்த அருட்பெருஞ்சோதி, அகரத்திருமேடு மக்கள் கலை கழகம், அங்காள பரமேஸ்வரி, நவசக்தி, வள்ளலார் ஆகிய மேடை நாடக கலை குழுக்களை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட கலைஞர்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நாடகங்களை நடத்தி காட்டினர்.
இதில் நரகாசுர வதம்- ஸ்ரீகிருஷ்ண பாமா விஜயம், ஸ்ரீமுருகன் திருவிளையாடல்- சூரசம்ஹாரம், குமாரவிஜயம் உள்ளிட்ட புராண கதைகளை விளக்கும் நாடகங்களை நாடக கலைஞர்கள் தத்துவரூபமாக நடித்து காட்டினர். முன்னாள் முதல்வர் காமராஜர் அமைச்சரவையி்ல் இருந்த பூவா ராகவன், வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம், நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை தேவயானி, கவிஞர் காசி முத்துமாணிக்கம், ஜோதிடர் காழியூர் நாராயணன், இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications