For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் அட்டகாசமாகத் துவங்கிய உல‌க‌ தூய்மையாக்க‌ல் ப‌ணி 2012

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் முனிசிபாலிட்டி ஐக்கிய‌ நாடுக‌ள் ச‌பையின் சுற்றுச்சூழ‌ல் அமைப்புட‌ன் இணைந்து உல‌க‌த் தூய‌மையாக்க‌ல் ப‌ணி 2012ஐ 20.12.2012 அன்று காலை துவ‌ங்கியது.

Great start for 'Clean up the world 2012'
இப்ப‌ணியினை துபாய் முனிசிபாலிட்டி இய‌க்குந‌ர் ஜென‌ர‌ல் பொறியாள‌ர் ஹுசைன் நாச‌ர் லூத்தா துவ‌க்கி வைத்தார்.

இந்நிக‌ழ்ச்சியில் அர‌சு, அர‌சு சாரா த‌ன்னார்வ‌ அமைப்புக‌ள் ம‌ற்றும் ப‌ல்வேறு க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ள் ப‌ங்கேற்ற‌ன‌. ப‌ள்ளிக் குழ‌ந்தைக‌ளுக்கு சுற்றுச்சூழ‌ல் விழிப்புண‌ர்வை ஏற்ப‌டுத்தும் வ‌கையில் பெயிண்ட்டிங் ம‌ற்றும் ப‌ல்வேறு போட்டிக‌ள் நடத்தப்பட்டன‌. அத‌னைத் தொட‌ர்ந்து சுற்றுச்சூழ‌ல் விழிப்புண‌ர்வு க‌ண்காட்சியும் ந‌டைபெற்ற‌து. இவ்வாண்டுக்கான‌ சுற்றுச்சூழ‌ல் ப‌ணி Our place... Our Planet....Our Responsibility எனும் கருத்தினை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

வரும் 23ம் தேதி வரை துபாயின் பல்வெறு பகுதிகளில் நகரைத் தூய்மையாக்கும் பணியில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் ஈடுபடுகின்றன.

இப்ப‌ணியில் த‌ன்னார்வ‌ ஒருங்கிணைப்பாள‌ராக‌ துபாய் ஈடிஏ அஸ்கான் குழும‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் த‌மிழக‌த்தின் காய‌ல்ப‌ட்டின‌த்தைச் சேர்ந்த‌ அஹ‌ம‌து சுலைமான் செய‌ல்ப‌ட்டு வ‌ருகிறார்.

English summary
Dubai Municipality's 'Clean up the world 2012' campaign got kick started on tuesday. Various educational institutions and volunteers will clean various parts in Dubai till november 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X