For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்திய சுதந்திர தினத்தையொட்டி துபாயில் ரத்ததான முகாம்: 200 பேர் பங்கேற்பு

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் இந்திய நண்பர்கள் சங்கம், இந்திய கன்சுலேட் மற்றும் இந்திய ச‌மூக‌ நலச்சங்கத்தின் (Indian Community Welfare Committee -ICWC) ஆதரவுடன் இந்தியாவின் 66வது சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம் 10.08.2012 அன்று காலை 8.30 மணிக்கு இந்திய கன்சுலேட் அரங்கில் நடைபெற்ற‌து.

ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜென்ரல் சஞ்சய் வர்மா துவக்கி வைத்து ம‌ருத்துவ‌ ப‌டிவ‌ங்க‌ளை வ‌ழ‌ங்கினார். இந்திய‌ ச‌மூக‌ ந‌ல‌ச் ச‌ங்க‌த்தின் க‌ன்வீன‌ர் கே. குமார் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார்.

அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய தலைமைப் புரவலர் சித்தார்த் பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். லத்திஃபா மருத்துவமனை ரத்த வங்கியின் ரீம் அப்பாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்பித்தார்.

இம்முகாமில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ப‌ங்கேற்று ரத்ததானம் செய்தனர். இந்திய‌ ந‌ண்ப‌ர்க‌ள் ச‌ங்க‌ ர‌த்ததான‌ குழுவின் ஒருங்கிணைப்பாள‌ர் மோக‌ன்ராஜ் ந‌ன்றியுரை நிக‌ழ்த்தினார்.

English summary
Indian Consulate in association with ICWC and Friends of India conducted a blood donation camp in Dubai on august 10 ahead of India's 66th independence day. 200 people attended the camp and donated blood.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X