18ம் தேதி சூரசம்ஹாரம்: நெல்லை- திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள்
நெல்லை: கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வரும் 18ம் தேதி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
திருச்செந்தூர் முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழாவையொட்டி வரும் 18ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதையொட்டி நெல்லை-திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் ரயில் நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு 1.45க்கு திருச்செந்தூரை அடையும். இரண்டாவது ரயில் மதியம் 1.30 மணி்க்கு புறப்பட்டு 3.45க்கு திருச்செந்தூரை அடையும். இந்த இரண்டு ரயில்களும் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சானவிளை,குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மூன்றாவது ரயில் நள்ளிரவு 11.30 மணிக்கு புறப்பட்டு 12.45 மணிக்கு திருச்செந்தூரை அடையும். இந்த ரயில் வழியில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது. இதேபோன்று திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முதல் ரயில் காலை 9.15 மணி்க்கு புறப்படுகிறது. இந்த ரயில் காலை 10.50 மணிக்கு நெல்லையை வந்தடையும். இரண்டாவது ரயில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு 8.45
மணிக்கு நெல்லையை வந்தடையும். இந்த ரயில்கள் வழியில் முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு ரயில்வே அதிகாரி வேணுகோபால் தெரிவித்தார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications