2025ல் இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் வரும் எச்சரிக்கை ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் 2025ம் ஆண்டு இந்தியாவில் கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்

தண்ணீரின் பொருட்டு உலக அளவில் எழும் பிரச்னைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் இந்தாண்டை (2013) சர்வதேச தண்ணீர் ஒத்துழைப்பு ஆண்டாக ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்துள்ளது.

நீரின்றி அமையாது உலகு... இது வள்ளுவர் வாக்கு. இன்னொரு உலகப் போர் மூண்டால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அந்த அளவிற்கு தண்ணீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வரும் 2030ல் தண்ணீர் தேவை 6900 பில்லியன் கன மீட்டராக அதிகரிக்கும் என ஐ.நா.வின் நீர்வள ஆதார மையம் கணித்துள்ளது.

பருவநிலை மாற்றம், வெப்பமடைந்து வரும் பூமி, அதிகரித்து வரும் மக்கள் தொகை, போன்ற காரணங்களால் உலகின் பல்வேறு நாடுகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகநாடுகளிடையே தண்ணீர் பகிர்வில் ஒருமித்த கருத்துணர்வு, ஒற்றுமையை உருவாக்கும் முயற்சியை ஐ.நா மன்றம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவில் அண்டை மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் ஆண்டுதோறும் ஏற்படும் சிக்கலை தீர்க்க மத்திய அரசு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச தண்ணீர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் தண்ணீரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம்

மார்ச் 22 சர்வதேச தண்ணீர் தினம்

உலகில் 19 நாடுகள் 50 சதவீதத்திற்கும் மேலான தண்ணீர் தேவையை அண்டை நாடுகளையே நம்பியுள்ளன. ஆண்டு தோறும் மார்ச் மாதம் 22ம் தேதி சர்வதேச தண்ணீர் தினமாக கொண்டாடப்படுகிறது. அப்போது தண்ணீர் ஒத்துழைப்புக்கான கோஷங்களை முன்வைத்து பிரசார இயக்கங்களும் நடத்தப்படவுள்ளன.

தண்ணீர் மரணங்கள்

தண்ணீர் மரணங்கள்

ஒவ்வொரு பதினைந்து செகண்டுக்கு ஒரு குழந்தை தண்ணீர் சம்பந்த மான நோயால் பாதிக்கப்பட்டு மரணிக்கிறது இது ஐநாவின் கணக்கீடு.

சுகாதாரமான தண்ணீர்

சுகாதாரமான தண்ணீர்

ஆற்றின் சீர்கேட்டால் 25 மில்லியன் பேர் புகலிடம் தேடி வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் இது சென்ற ஆண்டு கணக்கு. உலகில் மூன்றில் ஒருவருக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஐந்தில் ஒருவருக்கு சுகாதாரமான நல்ல குடிதண்ணீர் கிடைப்பதில்லை.

பசிக்கொடுமை அதிகமாகும்

பசிக்கொடுமை அதிகமாகும்

தண்ணீர் பற்றாக்குறையால் தானிய உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் இவற்றின் விலையும் ஒரு புறம் உயர்கிறது. தண்ணீர் கிடைக்காமல் போவது பசிக்கொடுமையை ஏற்படுத்துகிறது.

இந்தியாவின் தண்ணீர் உபயோகம்

இந்தியாவின் தண்ணீர் உபயோகம்

பெரும்பான்மையான இந்தியப் பெண்களின் வாழ்க்கை தண்ணீரை தேடிச்செல்வதிலேயே கழிகிறது.

உலகின் மொத்த பூமி பரப்பில் 2.4 % இந்திய நில பரப்பு உள்ளது, மக்கள் தொகையில் 17%, கால்நடை வளர்ப்பு 18%, நீர் ஆதாரத்தில் 4% உள்ளது.

தண்ணீரின் உபயோகம் 82 சதவிகிதம் விவசாயத்திற்கும், 8% தொழிற்சாலைகளுக்கும், மீதி 10 சதவிகிதம் நம் அன்றாட தேவைகளுக்கு செல்கிறது.

கடலில் கலக்கும் வெள்ளநீர்

கடலில் கலக்கும் வெள்ளநீர்

விவசாயத்திற்கான நதி நீர் பயன்பாடு இந்தியாவில் 20 சதவீதத்திற்கும் குறைவாகத்தான் உள்ளது. ஏராளமான வெள்ள நீர் ஆண்டு தோறும் கடலில் கலக்கிறது. அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையுடன் நதி நீரை பங்கிட்டுக்கொள்வதற்கு நதிகள் இணைப்பு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.

அணை கட்டுவதில் அக்கறை

அணை கட்டுவதில் அக்கறை

கடலில் வீணாகும் தண்ணீரை சேமிக்க புதிய அணைகள் கட்டுவதில் மத்திய அரசுக்கும் போதிய அக்கறை இல்லை. இதைப் பற்றி மத்திய பட்ஜெட்டிலோ, மாநில பட்ஜெட்டிலோ சரியான அறிவிப்பு இல்லை.

2025 ல் தண்ணீர் பிரச்சினை

2025 ல் தண்ணீர் பிரச்சினை

மழை கால வெள்ளத்தை சேமிக்க 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். நீர் மேலாண்மை மேம்படுத்த வேண்டும். உரிய நடவடிக்கை இல்லாதபட்சத்தில், 2025ல் இந்தியாவில் கடும் தண்ணீர் பிரச்னை ஏற்படும்.

சீனாவில் அதிக அணைகள்

சீனாவில் அதிக அணைகள்

உலகில் 45 ஆயிரம் பெரிய அணைகள் உள்ளன. சீனாவில் மட்டும் 22 ஆயிரம் பெரிய அணைகள் (26சதவீதம்) உள்ளன. அங்கு மக்கள் தொகை 130 கோடி. அமெரிக்காவின் மக்கள் தொகையோ 30 கோடி. ஆனால் அங்கு 6675 அணைகள் (14சதவீதம்). இந்தியாவில் மக்கள் தொகை 121 கோடி. இங்கு 4300 பெரிய அணைகள் உள்ளன. இது உலக அளவில் இது 9 சதவீதமாகும்.

கழிவுநீர் சுத்திகரிப்பு

கழிவுநீர் சுத்திகரிப்பு

இஸ்ரேல் நாட்டில் தொழிற்சாலை, வீடுகள் ஆகியவற்றில் வெளியேறும் கழிவு நீரை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துகின்றனர். இதே நிலை இந்தியாவிலும் வர வேண்டும் என அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அண்டை மாநிலங்களால் பாதிப்பு

அண்டை மாநிலங்களால் பாதிப்பு

தமிழ் நாட்டை பொருத்தவரை அண்டை மாநிலங்களால் தண்ணீர் நமக்கு கிடைப்பது தடுக்கப்படுகிறது. நகரம் விரிவடைவதால் அதை சார்ந்த பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

நதிநீர் இணைப்பு சாத்தியமா?

நதிநீர் இணைப்பு சாத்தியமா?

தமிழ்நாட்டில் காவிரி -அக்னியாறு, தெற்கு வெள்ளார்-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு ஆகியவை இரண்டு கட்டங்களாக இணைக்கப்படும் என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது அதேபோல தாமிரபரணி-கருமேனியார்-நம்பியார் ஆகியவையும் இணைக்கப்படும் எனவும், பென்னையார்-செய்யார் ஆறுகளும் இணைக்கப்படும் என வெறும் அறிவிப்பு மட்டுமே வெளியாகியுள்ளது.

2070 தமிழகம் பாலைவனமாகும்

2070 தமிழகம் பாலைவனமாகும்

தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் மட்ட அளவு குறைந்து கொண்டே செல்கிறது. குளங்கள் வற்றுவதால் சூழ்நிலை சீர்கேடு, தண்ணீருக்கான சண்டைகள் அதிகரித்து வருகிறது. இப்படியே போனால் 2070 ல் தமிழ்நாடு பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கின்றனர்.

தண்ணீரின் அவசியம்

தண்ணீரின் அவசியம்

தண்ணீரின் மகத்துவத்தை, சேமிப்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். குளிப்பதற்கு துவைப்பதற்கு அளவான தண்ணீரை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்.

தண்ணீர் விளையாட்டுகளை குறைத்துக் கொள்ளலாம். வீடுகளில் மழைநீர் சேமிப்பு நடைமுறைபடுத்துவது. வீட்டை சுற்றி சிமிண்ட் தரைகளை அமைப்பதற்கு பதில் ப்ளாக்குகளை உபயோகிக்கலாம்.

மேலும் உலக வங்கி தலையிட்டு 1960ம் ஆண்டு இந்திய, பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி சிந்து, ஜீலம், செனாப் நதி தண்ணீர் பாகிஸ்தான்தானுக்கு. கிழக்கு நோக்கி பாயும் சட்லெஜ், பியாஸ், ரவி நதிகள் இந்தியாவுக்கு என பகிர்ந்து கொள்ளப்பட்டது. சிந்து நதியின் குறுக்கே புதிய அணைக்கட்டுகள், நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றை இந்தியா மேற்கொள்ளலாம். ஆனால் 80 சதவீத தண்ணீர் பாகிஸ்தானுக்கு போய் சேரவேண்டும் என்பது ஒப்பந்தம். இதன்படி இன்று வரை இரு நாடுகளும் அச்சுபிசகாமல் நடந்து கொண்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+