For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதயத்தை அட்டாக் செய்யும் காற்று மாசு! ஆய்வில் தகவல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பலவீனமான இதயம் கொண்டவர்களுக்கு மாசடைந்த காற்று மூலம் மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக சர்வதேச ஆய்வுமூலம் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தில் மட்டும் காற்று மாசு காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு அளவை விட ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல நகரங்களின் காற்று மண்டலத்தில் மாசு அதிகமாக இருப்பதாக லான்செட் நடத்திய இந்த ஆய்வுக்கு உதவு செய்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.

வாகன புகையில்

வாகன புகையில்

கார்பன் மோனாக்சைட், நைட்ரஜன் டை ஆக்சைட் போன்ற வாயுக்களும், பேருந்துகள், லாரிகள் போன்றவை வெளியிடும் புகையில் உள்ள மிகச் சிறு துகள்களும் நுரையீரல்களுக்கு அடியே ஆழமாக போய் விடுவதுடன், இரத்த நாளங்களில் அவை கலந்தும் விடுகின்றன.

இதயம் செயலிழக்கும்

இதயம் செயலிழக்கும்

வாகனங்கள் வெளியிடும் புகையால் மாரடைப்பு ஏற்படுவதாக முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வு, காற்று மாசடைவதற்கும் இதயம் செயலிழப்பதற்குமான தொடர்பை கண்டறிந்துள்ளது.

பலவீனமானவர்கள்

பலவீனமானவர்கள்

எனவே பலவீனமான இதயத்தை உடையவர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளுக்கு அருகே வாழ்ந்தாலோ அல்லது சாலைகளில் அடிக்கடி பயணித்தாலோ அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.

13 லட்சம் பேர்

13 லட்சம் பேர்

காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

பிரிட்டனில் 7.5 லட்சம் பேர்

பிரிட்டனில் 7.5 லட்சம் பேர்

பொதுவாக மாரடைப்பு வந்த பிறகு இதயம் பலவீனமடைந்துவிடுகிறது. இந்த உடல்நிலையில் யுகேயில் மட்டும் ஏழரை லட்சம் பேர் உள்ளனர்.

12 நாடுகளில் ஆய்வு

12 நாடுகளில் ஆய்வு

லான்செட் நடத்திய ஆய்வுக்காக அமெரிக்கா, யுகே, சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் பல்லாயிரக் கணக்கானோரிடம் நடத்தப்பட்ட 35 ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு உபகரணங்கள்

பாதுகாப்பு உபகரணங்கள்

காற்று மாசடைவதை தடுக்கும் உபகரணங்களை உபயோகப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் எட்டாயிரம் இதயங்கள் செயலிழப்பதை ஆண்டுதோறும் தடுக்கலாம் என்று இந்த ஆய்வினை தலைமையேற்று நடத்திய டாக்டர் அனூப் ஷா கூறியுள்ளார்.

English summary
Air pollution can cause lung cancer and seems to worsen heart failure, researchers reported in two studies released recently. Both show the more pollution, the more disease. One study looked at lung cancer cases across Europe; the other looked at hospitalization for heart failure in several countries, including the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X