கோலம், மெஹந்தி, சமையல் போட்டி: கலை கட்டிய துபாய் தமிழ்ச் சங்க மகளிர் தின விழா
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் தின விழா கடந்த 22ம் தேதி ஷார்ஜாவில் உள்ள ரயன் ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடந்தது.
துபாய் தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின விழா 22.03.2013 அன்று மாலை ஷார்ஜா ரயன் ஸ்டார் சர்வதேச பள்ளியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
துவக்கமாக அமீரக தேசிய கீதம், இந்திய தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியன பாடப்பட்டது. கோபிகா மற்றும் ஓவியா ஆகியோர் திருக்குறள் வாசித்தனர். ஹரினி உமா மகேஷ் இன்று ஒரு தகவல் தந்தார்.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஆண்கள் அடங்குவது அன்பிலா? அதிகாரத்திலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் துபாய் தமிழ்ப் பெண்கள் சங்க தலைவி மீனாகுமாரி பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது. அன்பிலே எனும் அணியில் ரேணுகா சர்மா, லட்சுமி சுந்தர்ராமனும், அதிகாரத்திலே எனும் அணியில் சந்திரா கீதாகிருஷ்ணன் மற்றும் புவனா ரமேஷ் ஆகியோரும் தங்களது தரப்பு வாதங்களை உணர்வுப்பூர்வமாக வைத்தனர்.
சந்திரா கீதாகிருஷ்ணன், ரேணுகா சர்மா, சஞ்சனா, குஷித், ப்ரியங்கா, குஷ்மித் ஆகியோர் பாடல் பாடினர். சந்திரா பெண்கள் தினத்தையொட்டி நிகழ்ச்சி முழுக்க பெண்களால் நடத்தப்பட்டது.

சிறுவர்களுக்கான வண்ணம் தீட்டுதல் போட்டி
சிறுவர், சிறுமியருக்காக வண்ணம் தீட்டுதல், படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் சிறுவர், சிறுமியர் உற்சாகமாக கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஐந்து முதல் ஒன்பது வயது வரையிலானவர்களுக்கு நடைபெற்ற வண்ணம் தீட்டுதல் போட்டியில் ஸ்ரியா, சிவகன்யா, ப்ரசிதா ஆகியோரும், ஒன்பது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு நடைபெற்ற படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் போட்டியில் நேகா, ப்ரியங்கா, வசுந்த்ரா ஆகியோரும் முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளைப் பெற்றனர்.

பெண்களுக்கான சமையல் போட்டி
பெண்களுக்கான சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில் சைவப் பிரிவில் ப்ரியா பாலாஜி முதல் பரிசைப் பெற்றார். அசைவத்தில் காமாட்சி ராஜேந்திரன் மற்றும் ரேணுகா பரிமேழலகன் ஆகியோர் முறையே முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளைப் பெற்றனர்.

மருதாணி இடும் போட்டி
பெண்களுக்கு மருதாணி என்றால் கொள்ளைப் பிரியம் என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் பெண்களுக்காக மருதாணி இடும் போட்டி நடந்தது. அதில் பலர் கலந்து கொண்டு பல பல டிசைன்களில் மருதாணி இட்டனர். இதில் கீதா கதிர்வேல் முதல் பரிசையும், ப்ரியா பாலாஜி இரண்டாவது பரிசையும் பெற்றனர்.

கோலப்போட்டி
பெண்களுக்காக சமையல், மருதாணி தவிர்த்து கோலப் போட்டியும் நடத்தப்பட்டது. இதில் லட்சுமி சுந்தரராமன் முதல் பரிசையும், அருணா உமா மகேஷ் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications