கார்த்திகை தீபம்… அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்பு
கார்த்திகை தீப திருவிழாவை ஒட்டி தமிழகம் முழுவதும் அகல்விளக்குகள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.
கார்த்திகை தீப விழா 17ம் தேதி நடைபெற உள்ளது. இந்துக்களின் மிகமுக்கிய பண்டிகையான தீபத்திருவிழாவை ஒட்டி 3 நாட்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி அலங்கரிப்பார்கள்.
சென்னையில் மந்தைவெளி, மயிலாப்பூர் கச்சேரி சாலை பகுதிகளில் கடைகளிலும் தள்ளு வண்டியிலும் விளக்குகள் விற் பனை செய்கின்றனர். ஒன்றரை ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மண் அகல் விளக்குகள் பல டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளன.

அகல்விளக்குகள்
கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவார்கள். களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள் பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடியதாக விளங்குகின்றன.

வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி
மண்பாண்ட தொழிலாளர்கள் களிமண்ணில் அகல்விளக்குகள் செய்து விற்பனைக்கு அனுப்புவார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து சிங்கப்பூர் மலேசியா மற்றும் சில நாடுகளுக்கும் செல்கிறது.

ரெடிமேட் விளக்குகள்
வளர்ந்து வரும் நவநாகரீக காலத்தில் அகல் விளக்குகளை ஏற்றுவது குறைந்து வருகிறது. இவர்களை கவர ரெடிமேட் விளக்குகள் நாடு முழுவதும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பபடுகின்றன. சிவகங்கை மாவட்டம் இடைக்காட்ரில் கண்ணை கவரும் விதமாக பல்வேறு வடிவங்களில், நிறஙகளில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன.

மெழுகு விளக்குகள்
சாதாரண மெழுகு மூலப்பொருளை உருக்கி தேவையான வர்ணங்கள் சேர்த்து அச்சுகளில் ஊற்றி ரெடிமேட் விளக்குகள் தயாரிக்கின்றனர். அந்தந்த சீசனுக்கு ஏற்ற விளக்குகள் தயாரிப்பதும் உண்டு. தற்போது அண்ணாமலையார் தீபம், குபேர தீபம், சங்கு தீபம், மயில் தீபம் உள்ளிட்டவைகளை தயாரித்து விற்பனைக்கு அனுப்புவனதகாக கூறுகின்றார் தயாரிப்பாளர் சிவகுமார்.

வண்ண வண்ண விளக்குகள்
4கிராமில் இருந்து 10கிராம் எடை வரை விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. பச்சை, சிவப்பு, ஆரஞ்சு, ஊதா உள்ளிட்ட கலர்களில் விளக்குகள் தயாரிக்கப்படுகின்றன. எண்ணை ஊற்றி திரியை வைத்து விளக்குகள் ஏற்றும் காலம் போய் ரெடிமேட் விளக்குகளின் காலம் வந்துவிட்டபடியால் அவர்களுக்கு ஏற்ற வகையில் கண்ணை கவரும் வகையில் விளக்குகள் விற்பனைக்கு வந்துள்ளன.

டிசைனுக்கு ஏற்ற விலை
விளக்குகள் அனைத்தும் 10ரூபாயில் இருந்து 500ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது என்றார். மற்றொரு தயாரிப்பாளர் முத்துமணி கூறுகையில் பெரும்பாலும் மெழுகின் எடையை கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.

தீபம் ஏற்றுவோம்
திருவண்ணாமலை திருக்கோவிலில் கார்த்திகை திருநாளில் அகல் விளக்குகளை ஏற்றவும், தானம் அளித்ததாக முதலாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் அறிய முடிகிறது. களிமண் அகல் விளக்குகளில் ஏற்றப்படும் தீபம் மிகச் சிறந்தது என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். தொன்மைச் சிறப்பு வாய்ந்த அகல் விளக்குகளை கார்த்திகை தீபத் திருநாளில் ஏற்றி மகிழ்வோம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications