சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவும் கோபம்...
அன்பு, பாசம், காதலைவிட கோபம்தான் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபல்யமாகி, வாழ்வுடன் ஒன்றிப் போயிருக்கும் சமூக இணையதளங்கள் ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர்.
ஏதாவது ஒருசம்பவம் பாதித்தாலே, பிடித்துப் போனாலே அதனை கருத்தாக மாற்றி உடனே ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவிடுவார்கள்.
சினிமாவோ, அரசியலோ, நடிகையின் கருத்தோ அரசியல்வாதியின் உளரலோ எதுவென்றாலும் கேள்விப்பட்ட அல்லது பார்த்த அல்லது படித்த உடனே சமூகவலைத்தள ஆர்வலர்கள் தமது கருத்துக்களை பதிந்து விடுகிறார்கள்.

சீனாவில் சமூகவலைத்தளம்
இப்படிபட்ட உலக சமூக இணையதளங்களில் ஒன்றுதான், வே-போ. மேற்குலகின் டிவிட்டர் போன்றது சீனாவின் இந்த வே-போ. ஐநூறு மில்லியன் மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். நூறு மில்லியன் கருத்துகள் தினமும் இதில் பதிவாகின்றன.

வலைத்தள ஆய்வு
தமது சீன நாட்டின் இந்த வே-போ இணையதளம் பற்றி, தலைநகர் பீஜிங்கிலுள்ள பே ஹாங் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் வெளியாகியுள்ளன.
வே-போ பயணீட்டாளர்களின் சொற்பிரயோகம், ‘எமோட்டிகான்' என்கிற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கேலிச்சித்திரப் பிரயோகம் ஆகியவற்றை ஆராய்ந்த பல்கலைக்கழக ஆய்வாளர்கள், வே-போவில் வெளியிடப்படும் கருத்துக்களை கோபம், சோகம், குதூகலம், விரக்தி என்று நான்கு பிரிவுகளாக பிரித்துத் தொகுத்தார்கள்.

சமூக பிரச்சினைகள்
சீனாவிலுள்ள சமூகப் பிரச்சினைகள், வெளிநாடுகளுடனான இராஜந்தந்திர தகராறுகள், இவை போன்ற தகவல்கள் வே-போ தளத்தில் ஆத்திரத்துடன் பகிர்ந்து கொள்ளப்பட்டன என்று ஆய்வுகள் காட்டின.

கோபம்தான் அதிகம்
இவற்றில் கோபமூட்டும் பதிவுகளே மக்கள் மத்தியில் அதிக அளவில் பரிர்ந்து கொள்ளப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். இதற்கு காரணம், கோபக்கார பதிவர்களுக்கு கோபக்கார நண்பர்கள் ஏரளமாக இருப்பதாகக்கூட இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

70 மில்லியன் பதிவுகள்
2010 ஆம் ஆண்டில் ஆறு மாத காலம் சுமார் இரண்டு லட்சம் வே-போ பாவனையாளர்களின் எழுபது மில்லியன் பதிவுகள் ஆராயப்பட்டு இந்த முடிவுகள் எட்டப்பட்டன.

கோபக்கார நண்பர்கள்
இதேபோல, பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் சிலர் கண்டுபிடித்துள்ள ஒரு கணினி தொழில்நுட்பம் ட்விட்டர் தளத்தின் மூலம், ஒரு நாட்டின் உணர்வை அறிய முடிகிறது, ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் ஆத்திரம் கொண்டிருந்தால், அதே கருத்தை உள்ளவர்களுடன் அவர் இணைவது இயற்கைதான் என்று ஆய்வை நடத்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications