நேஷ்வில் தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவு நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
நேஷ்வில்(யு.எஸ்): டென்னசி தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவினர், மார்பக புற்று நோய் விழிப்புணர்வு முகாம் நடத்துகிறார்கள். மார்ச் 13, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் நோலன்ஸ்வில் ஹிஸ்டாரிக்கல் சொசைட்டி (Nolensville Historical Society) வளாகத்தில் நடைபெற உள்ளது.
காலை உணவுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. Mathew Walker Comprehensive Health Center ல் மார்பக புற்றுநோய் கல்வியாளராக பணியாற்றும் மார்லின் ஆடம்ஸ், நோய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விவரங்களை எடுத்துரைக்கிறார்.

வேண்டர்பில்ட் இன்க்ராம் சென்டர் இணை பேராசிரியர் டாக்டர் நிஷிதா ரெட்டி, மார்பக புற்றுநோய் பற்றி கூடுதல் தகவல்கள், ஆராய்ச்சி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உரையாற்றுகிறார்.
தொடர்ந்து நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் அனுபவங்களை டாக்டர் கல்பனா போச்சம்பள்ளி மற்றும் கவிதா சரவணன் விவரிக்க உள்ளார்கள்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் சுமார் 2 லட்சத்து 31 ஆயிரம் பேர்கள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக Breast Cancer Research Foundation தெரிவித்துள்ளது.
வருமுன் காப்போம் என்ற நோக்குடன் டென்னசி தமிழ்ச் சங்கத்தின் மகளிர் பிரிவினர் நடத்தும் இந்த விழிப்புணர்வு முகாம் அமெரிக்க தமிழ்ச் சமூகத்தில் முன் மாதிரியாக விளங்குகிறது.
அனைவரும் பங்கேற்று தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டென்னசி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications