• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி ஒரு தலைவர் கூட இல்லையே தமிழகத்தில் இப்போது.. வருந்துகிறோம் கக்கன்ஜி!

|
  நேர்மையின் சிகரம் கக்கன்- வீடியோ

  சென்னை: "பொருளாதாரம் பற்றியும் பணத்தை பற்றியும் அதிகமாக சிந்தித்து எழுதிவந்த எனக்கு அந்த பொருளாதாரமும் பணமும் இல்லாமல் போய்விட்டது" என்று காரல் மார்க்ஸ் தான் எழுதிய 'தாஸ்காப்பிடல்' என்னும் நூலின் இறுதியில் குறிப்பிட்டிருப்பார். இது உலகறிந்த காரல் மார்க்ஸ்-க்கும் மட்டுமல்ல... நம் கக்கனுக்கும் பொருந்தும் உண்மை.

  ஆம். கக்கன் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமகன் - கறைபடியா கைகளின் எஜமானர் - அரசியலில் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர், தமிழக அமைச்சர் என பதவிகளை வகித்தவர் - தியாகம், தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்.

  கக்கன் என்பது கடவுளின் பெயர். தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் பிள்ளையானால் கக்கன் என்றும், பெண் பிள்ளையானால் கக்கி என்றும் பெயரிடுவது வழக்கம். ஏழ்மையிலும் பள்ளி படிப்பு முடித்தார். அப்போது பல விடுதலை வீரர்களின் நட்பு கிடைத்தது. அரிசன சேவா சங்கத்தில் இணைந்து பல சமூக செயல்களில் ஈடுபட துவங்கினார். எனினும் கரடு முரடான பாதைகளிலேயே அவர் பயணம் துவங்கியது. 1934-ல் சேவா சங்க விழாவுக்கு மதுரை வந்திருந்த காந்தி, கக்கனின் சுறுசுறுப்பு, ஆர்வத்தை பாராட்டினார். இதையடுத்து கக்கன் காங்கிரசில் ஈடுபட்டு செயலாற்றினார். வந்தே மாதரம் என்று செல்லுமிடமெல்லாம் கூறினார். இதனால் ஆங்கில அரசு இவரை கைது செய்து சிறையிலடைத்தது.

  நாட்டின் விடுதலை குறித்து இவர் நடத்தும் பல காரியங்களுக்கு ஆங்கில அராஜகம் பல முறை சிறை தண்டனை அளித்தது. சிறையில் அவருக்கு தொடர்ந்து 5 நாள் கசையடி கொடுக்கப்பட்டது. இவர் அடிவாங்குவதை பார்க்க இவரது மனைவி 5 நாளுமே வரவழைக்கப்பட்டார். உடலின் கசையடி வலி ஒருபுறமும், தான் அடிவாங்குவதை மனைவி கண்கூடாக பார்ப்பது மறுபுறமும் என சேர்ந்து துடித்து சுயநினைவின்றியே விழுந்தார். இதனால் அவரை மாட்டு வண்டியில் தூக்கி போட்டு, கால்கள் தரையில்பட தரதரவென சிகிச்சைக்காக இழுத்து செல்லப்பட்டார். சிறைகளில் குடிக்க கொடுக்கும் கூழில் கல்லும், மண்ணும் கலந்து தரப்பட்டது. படுக்குமிடம் மேடு பள்ளமாக்கப்பட்டது.

   நன்மதிப்பை பெற்றவர்

  நன்மதிப்பை பெற்றவர்

  18 மாத சிறை தண்டனைக்குப் பின் விடுதலையான கக்கனுக்கு பல பொறுப்புகள் வந்தடைந்தன. 1957-ல் நடந்த பொதுத்தேர்தலில் சமயநல்லூர் தனித்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராஜார் முதல்வர் பணியில் அமரும்போது, தனது ஏழு அமைச்சர்களுள் கக்கனையும் ஒருவராக சேர்த்துக் கொண்டார். பின் 1962-ல் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று அது முதல், பொதுப்பணி, மற்றும் அரிசன நலம், வேளாண்மை, உளவுத்துறை, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, அரிசன நலம், உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத் துறை, போன்ற உயர்ந்த பொறுப்புகள் கக்கனின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அளிக்கப்பட்டன. தன் பொறுப்புகளையும் கடமைகளையும் பொது நோக்குடனும், எதிர்கால நலனை கருத்தில் கொண்டும் கக்கன் செயலாற்றினார். 1967-தேர்தலில் கக்கன் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்களும் சரி, மற்ற அரசியல்வாதிகளும் சரி கக்கனை மட்டும் பிரச்சாரத்தின்போது கடிந்து பேசியதே இல்லை. அனைத்து தரப்பிலும் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

   எளிமையின் சின்னம்

  எளிமையின் சின்னம்

  நாடாளுமன்ற உறுப்பினர், 10 ஆண்டு காலம் அமைச்சர் பதவி வகித்த போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்துக் கொள்வார் தன் சகோதரர் ஒருவருக்கு வேலை இல்லாமல் இருந்ததால் தன் அறையில் தங்க வைத்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு திடீரென அரசு துறையில் வேலை கிடைத்துள்ளது என்று கூறியதும், உடனே கக்கன், "நீ அரசு ஊழியனாகிவிட்டாய். ஒரு அரசு ஊழியர், அமைச்சர் வீட்டில் இருப்பது தவறு. உடனே புறப்படு" என்று கூறி வீட்டைவிட்டு வெளியேற்றினார். அரசியல்வாதிகள் எதையெல்லாம் மிக உயர்ந்த மரியாதைக்குரியதாக கருதுகிறார்களோ அதையெல்லாம் மிக சாதாரணமாக கருதினார் கக்கன்.

   வருமானத்துக்கு வழியில்லை

  வருமானத்துக்கு வழியில்லை

  ஒரு கட்டத்தில் பதவி இழந்தவுடன் தான் தங்யிருந்த வீட்டை காலி செய்தார் கக்கன். படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகள், மற்றும் மனைவியுடன் எங்கே போய் வீடு தேடுவது? யாரை விசாரிப்பது என்ற கவலையுடன் ராஜினாமா கையெழுத்திட்டுவிட்டு, அரசு மாளிகை வீட்டை காலி செய்து ஒரு சாதாரண நபரை போல் பேருந்தில் ஏறினார். அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள் உட்கார இடம் கொடுத்தும் மறுத்து மற்ற பயணிகளோடு நின்று கொண்டே வந்தார். 10 ஆண்டுகால ஆட்சியில் இருந்த கக்கனுக்கு சொத்தும் இல்லை- சொந்த வீடும் இல்லை. வாகனமும் இல்லை - கண்பட்ட இடத்தில் இருந்த பணியாளர்கள் தற்போது இல்லை - ஆட்சியில் இருக்கும்போது காரியம் சாதித்துக்காண்ட சுயநலமிகள் தற்போது இல்லை - மாதாமாதம் வருமானத்துக்கும் வழியில்லை. ஒருசில நல்லியதங்கள உதவியதால் வாடகை வீட்டில் தி.நகரில் குடியேறினார். மனைவியோ விடுதி பணி செய்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றினார்.

   கோரைப்பாயில் கக்கன்

  கோரைப்பாயில் கக்கன்

  1979-ல் மதுரை அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் கக்கன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆரிடம் கக்கன் மருத்துவமனையில் உள்ள தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மருத்துவமனைக்கு வந்துவிட்டார் எம்ஜிஆர். அங்கு மருத்துவமனை வராண்டாவில் கோரைப்பாயில் படுத்த படுக்கையாய் எழுந்திருக்க கூட முடியாத நிலையிமையில் இருந்த கக்கனை எம்ஜிஆர் கண்டார். இருவரும் சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்து கண்கலங்கினர். அருகில் சென்ற எம்ஜிஆர், "உங்களுக்கு என்ன வேண்டும்... என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றார். ஆனால் கக்கன், "ஒன்றும் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும். உங்கள் அன்பு இருந்தாலே போதும்" என்றார்.

   பிழைக்க தெரியாதவர்

  பிழைக்க தெரியாதவர்

  ஆனால் எம்ஜிரோ, மருத்துவமனை பொறுப்பாளரை அழைத்து, "இவர் யார் தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவரை இப்படி மக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது? உடனே தனியறையுடன் உயர்தர மருத்துவம் கிடைக்க செய்யுங்கள்" என்று உத்தரவிட்டார். ஆனாலும் முதுமை காரணமாக 1981, டிச 23-ல் கக்கன் மரணமடைந்தார். ஆட்சியில் இருந்தபோதும்சரி, இல்இல்லாதபோதும் சரி, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க கக்கனால் மட்டுமே முடியும். தன்னைக் காத்துக் கொள்ளக்கூட பொருளாதார வசதி இல்லாமல், மருத்துவம் செய்து கொள்ள முடியாமல் போயிற்று கக்கனுக்கு. இதனால்தானோ என்னவோ, "பிழைக்க தெரியாதவர்" என அரசியல் உலகில் பேசப்பட்டார். நேர்மை, ஒழுக்கம், மக்களிடம் பழகும்விதம், கனிவான அணுகுமுறை, தொகுதிக்கு செய்த வளர்ச்சிப் பணிகள்தான் கக்கனை இன்றும் மறக்க செய்யாமல் இருக்கின்றன.

   இன்றைய அரசியல்வாதிகள்

  இன்றைய அரசியல்வாதிகள்

  ஆனால் தற்போதைய அரசியல்வாதிகளை நினைத்தால் தலையே சுற்றுக்கொண்டு வருகிறது. சமூக குற்றங்களை நேரடியாக அரங்கேற்றிய கிரிமினல்கள், கள்ளச்சாராய பேர்வழிகள் போன்றோரில் பெரும்பாலானோர் இப்போது அரசியலுக்கு வந்துவிட்டார்கள். சாதாரண ஒரு மாநகராட்சி உறுப்பினர் முதல் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் வரை மக்கள் திட்டத்திற்கான பணத்தில் கமிஷன் பெற்று குபேரர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை நடந்து சென்றவர்கள், சாதாரண மோட்டார்சைக்கிளில் வலம் வந்தவர்கள் இன்று குவாலிஸ் கார்களிலும், சொந்த விமானங்களிலும் பறந்து கொண்டிருப்பதை மக்கள் நேரிடியாக பார்த்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்திய நிர்வாகத்தின் உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை நபர்களில் 90 சதம் பேரின் முக்கிய தொழிலே, மக்கள் வரிப்பணத்தை பங்கு போட்டுக்கொள்வது தொடர்கதையாகிவிருகிறது.

   நிழலும் கூட ஒழுக்கமானதே

  நிழலும் கூட ஒழுக்கமானதே

  ஆனால் கக்கன் - சவுக்கடிகளை - தழும்புகளை பரிசாக பெற்ற மகான். கள்ளங்கபடற்ற அரசியல் ஞானி - தாழ்த்தப்பட்டோரின் நம்பிக்கை நட்சத்திரம், சட்டையைப்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளாத லட்சிய வீரன் - சுருக்கமாக சொன்னால் கக்கனின் நிழலும் கூட ஒழுக்கமானதே! கக்கன் - ஒரு பத்தரை மாத்து கருப்பு தங்கம்.. அது என்றைக்கும் தன் தரத்தையோ மதிப்பையோ ஒருபோதும் இழக்காது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Kakkan was a freedom fighter, who served as minister for 10 years. Mettur and Vaigai Dams were constructed during his tenure as minister. Kakan was a symbol of simplicity.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more