For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"காகிதப் பூக்கள்".. நெடுந்தொடர் - (7)

எழுத்தாளர் லதா சரவணனின் புதிய நெடுந்தொடர் காகிதப் பூக்கள். தொடரின் 6வது அத்தியாயம் இது.

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

ஈஸ்வர் புன்னகையோடு பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான் சந்தோஷமாய்! கண்ணாடி முன் நின்று தன் உருவத்தைக் கண்டான். சுரேன் கூறியது போல், அவன் முகத்தில முரட்டுத்தனமே இல்லை. வசீகரிக்கும் மென்மை இருந்தது.

"உன்னைத் தூக்கிட்டுப்போய் கல்யாணம் செய்துப்பேண்டா ! நீ மட்டும் பொண்ணா இருந்து இருந்தால்...?! "நண்பனின் குரல் மீண்டும் மீண்டும் காதிற்குள் ஒலித்து அதரங்களில் இளநகை பூக்கவைத்தது.

கட்...!

கூவாகம் கோவிலின் முகப்பு

ஐநூறு ஆண்டுகால பழைமையானது. கல்சுவரில் கட்டப்பட்டு கருவரைக்கு மேலே வட்ட வடிவில் கோபுரம் அதில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை திரெளபதியின் சிற்பங்கள் கோபுரத்தின் நான்கு புறங்களிலும் காளியம்மன் சிலைகள், பணிப்பெண்கள். முகப்பு மண்டபத்தின் மேல் அரவான் களப்பலி தொடர்பான நிகழ்வுகளை சிற்பங்களாக வடிவமைத்து உள்ளனர். 1997-ஆம் ஆண்டு அலிகள் மாநாடு ஒன்று விழுப்புரத்தில நடைபெற்றது. அங்கு கலந்துகொண்ட ரவி என்பவர்தான் அலிகளுக்கு அரவாணி என்று பெயரிட்டார். அதன்பிறகே கூவாகம் விழா அரசு விழாவாக மாற்றமடைந்தது.

Kakithapookkal, new story series

மீனாட்சி ரசித்து ரசித்து காபியைப் பருகியதை கண்டு கோபமாய் முனகினாள் ரத்னா.

"என்னடி வாய்க்குள்ளேயே முனகிகிட்டு இருக்கே ? நீதானே காபி வேண்டான்னு சொன்னே ? இப்போ முனகினால் எனக்கு வயிறு வலிக்காதா ?!"

"உன் காபி யாருக்கு வேணும் ?"

"பின்னே? என்னப் பிரச்சனைடீ உனக்கு ?"

"பேப்பர் பார்த்தியா? உன் ஆளு எத்தனை பெரிய விஷயம் செய்து இருக்காருன்னு? ஊர்பூரா பேச்சே அதுதான். டிவி, பத்திரிகைன்னு கலக்குறார். நீயானா அழுக்கு கேண்டீனில் உட்கார்நது டீ குடிக்கிறே ?"

"தப்பு ?"

"எது?'

"உன் புள்ளி விவரம்? நான் குடிப்பது காபி ?! டீயில்லை ?!"

"நாசமாப்போச்சு,,,?"

"இல்லையே நல்லாத்தானே இருக்கு,,," ரத்னா முறைப்பதைக் கண்டு, சிரித்தாள் மீனாட்சி

"நீயென்ன ஜடமா ? மேடையில் உணர்வு பூர்வமா கட்டுரை எழுதி பேசிட்டா போதுமா?

வாழ்க்கையில் பூஜ்ஜியமாய் இருக்கியே? பி,ஏ கடைசி வருடம் கல்லூரி விழாவில் ஈஸ்வரைப் பார்த்தே?! இப்போ எம்.ஏ முடிச்சிட்டு பி.ஹெச்.டி பண்றே இந்நேரம் வயிற்றைத் தள்ளிட்டு வந்து நிக்க வேண்டாமா?"

"அடி கழுதை மீனாட்சி அவளை அடிக்க கை ஓங்கினாள் திமிரா ?"

"இல்லே டியர், நீ இப்படி தத்தியா இருக்கியேன்னு கவலை..."

"நான் காதலை சொல்லுவதில் உனக்கென்னடி அத்தனை அவசரம்..."

"எனக்கு கிடைக்காத இன்பம் உனக்காவது கிடைக்கட்டுமே ?!"

"ஏன் நீயும் காதலிக்க வேண்டியதுதானே?"

"தெரிஞ்சிகிட்டே கேட்கக்கூடாது? எனக்குத்தான் சின்னவயசிலேயே ஒரு மாமா பையனை முடிவு பண்ணிட்டாங்களே ? இனிமே எங்கே காதல் வர்றது?"

"சரிடி உங்க மாமா பையனைக் காதலிக்க வேண்டியதுதானே ?"

"அவன் உன்னைவிடவும் சாமியார். நீயே தேவலாம்? நானே போய வலிய நின்றாலும் கைபட்டா ஓடற தூரத்தில்தான் நிப்பான்."

"அத்தனை பயமா?" மீனாட்சி கிண்டலாய் கேட்க,

"நீ வேற அது ஒரு பண்பாட்டில் ஊறின ஜடம். எல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுன்னு 1970 ஹீரோயின்ஸ் டயலாக் சொல்லும். பேருக்குத்தான் முறைப்பையன் ஒரு சீண்டல், முத்தம், ஒரு டச், ஒரு லுக் ஒண்ணும் இல்லை,"

மீனாட்சி கண்களில் நீர் வருமளவுக்கு கலகலவெனச் சிரித்தாள்.

"பேசாம கல்யாணம் பண்ணிக்கோ,.,...!"

"அது ஒரு வட்டத்தினுள் சிக்கிடும். சில விஷயங்கள் அந்தந்த வயசிலே அனுபவிக்கணும் மீனு! அப்பத்தான் லைப் இன்ட்ரஸ்டிங்கா இருக்கம். திருட்டு மாங்காய்க்குத்தானே ருசி அதிகமின்னு நீ கேள்விபட்டதில்லையா ? எப்போ உன் லவ்வை டிக்ளர் பண்ணப்போறே ?"

"கூடிய விரைவில் !"

"சீக்கிரம் மூணு வருஷம் ஆச்சு, இப்படியே யோசிச்சா காத்திருந்த புருஷனை ஸாரி காதலனை இன்னைக்கு வந்த எவளாவது அடிச்சிட்டுப் போயிடப்போறோ?"

"போடி லூசு?!"

"யாரோ முன்பின் அறியாதவ கூட உன் ஆளுக்கு அப்ளிகேஷன் போடலான்னு யோசிப்பாளுங்க?"

"எதுக்கும் காலநேரம் வரணும் ரத்னா?!"

"கிழிச்சே ?! அதுக்கு முன்னாடியாவது அவரை நேரில் பார்க்க சந்தர்ப்பம் இருந்திருக்காது. இப்போதான் ஒரு மாதமா அவர் வீட்டுக்கு எதிர் வீட்டிலேயே இருக்கே இப்பவும் இல்லேன்னா எப்படி டீ?!"

"லூசு! வீட்டுக்கு பக்கத்திலேதானே இருக்கேன். உள்ளே இல்லையே ?! அவரை சந்திக்க சரியான சந்தர்ப்பமே எனக்கு கிடைக்கலைடீ!"

"முட்டாள் ! காதல் ஆயிரம் காரணங்களை உருவாக்கும். காதலிக்கிறவங்க எல்லாரும் மணிக்கணக்கா பேசறாங்களே?! காரணத்தை தேடியா பேசறாங்க! அர்த்தமில்லாத பேச்சு ஆறுதலான அணைப்பு செல்ல உரசலோடு கூடிய ஆழமான பார்வை அதுதான் காதலர்கள் அடையாளம். தனக்கு பிடித்த பெண்ணை பார்க்க ரோட்சைட் ரோமியோக்கள் எப்படி அலைவார்கள்? டீ குடிக்கிறாமாதிரி, சிகரெட் பிடிக்கிறாமாதிரி, போன் பேசுவது போல் எத்தனையோ இதுதானே உருவாக்குவதுதானே!."

"நீயே ஒருநல்ல ஐடியாவாச் சொல்லேன்."

"நீ லவ் பண்றீயா? இல்லை நான் லவ் பண்றேனா? சரி பிரண்டாப்போயிட்டே, சொல்றேன் கேட்டுக்கோ?! எங்க வீட்டில் இந்த பலகாரம் செய்தாங்க?!. நீங்க சாப்பிட்டீங்களா? இந்த வாரம் என் கட்டுரை வந்திருக்கு படிச்சு உங்க அபிப்ராயம் சொல்லுங்க. இதுவும் இல்லேன்னா நாம ரிசர்ச் பண்ணும் திருநங்கைகளை நேரில் சந்திக்க யாரை அணுக வேண்டும்? இதோ இதில் இருக்கிற பத்திரிகை நீயூஸ் காட்டி விஷ் பண்ணலாமே?"

தோழி சொல்வதையெல்லாம் கேட்ட மீனாட்சி "செய்யலாம்தான்"

"என்னத்தே செய்யலாம் ?"

"போக வர்ற ஒரு சின்ன சிரிப்பு, இல்லே ஒரு ஹல்லோ அதுகூடவா நான் சொல்லித் தரணும்."

"சரிடி ஆனா இப்படி வலியப்போய் நின்னா அவர் என்னைத் தப்பா நினைக்க மாட்டாரா?"

"நோ வே! எந்தவொரு விஷயமும் அடிக்கடி கண்ணில்படும்போதுதான் யோசிக்கத் தோன்றும், நீ அடிக்கடி அவர் முன்னாடி போய் நின்னாத்தான் நீ ஏன் வர்றேங்கிற விஷயம் தெரியும். உன் நெருக்கமும் புரியும், தனுஷ் சொல்றா மாதிரி பார்க்கப் பார்க்கத்தாண்டி பிடிக்கும் மனசில பதியும்".

"சரிடி எனக்காக இல்லைன்னாலும் உனக்காவது முயற்சிக்கிறேன்".

"ஆமா நான்தான் குடும்பம் நடத்தப்போறேன் பாரு?!"

"இப்போ இப்படி பேசறவ அன்னைக்கு யோசின்னு அவகாசம் தந்தியே ஏனாம்? இல்லேன்னா அப்பவே என் விருப்பத்தை அவர்கிட்டே சொல்லியிருக்கலாமே?"

(தொடரும்)

English summary
Wtier Latha Saravanan's new series Kakithappokkal. The story talks about the life a boy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X