For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அபுதாபியில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்... வெளி நாட்டினரும் பங்கேற்பு

அபுதாபியில் தமிழர்கள் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் வெளிநாட்டினவரும் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

Google Oneindia Tamil News

அபுதாபி: தமிழர்கள் கொண்டாடிய தமிழ் புத்தாண்டு நிகழ்ச்சியில் வெளிநாட்டினவரும் உற்சாகமாக கலந்துகொண்டனர்.

தமிழகத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இந்நன்னாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.

பாரம்பரிய உடையுடன்

பாரம்பரிய உடையுடன்

இந்நிலையில் அபுதாபியில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடினர். அபுதாயின் ஜிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்கள், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து புத்தாண்டை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடினர்.

வெளி நாட்டினர்

வெளி நாட்டினர்

அவர்களுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்தியாவின் பீகார், குஜராத், ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பலரும் கலந்து கொண்டு தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.

பாரம்பரியம்

பாரம்பரியம்

இந்த கொண்டாட்டத்தின் போது கலாச்சாரம், பாரம்பரியம், உணவு, வேளாண்மை, திருவிழாக்கள் ஆகியவற்றை தமிழர்கள் சக நண்பர்களுடன் பெருமையுடன் பகிர்ந்துகொண்டனர்.

தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம்

தமிழால் இணைவோம் என நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பான விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வேற்று மதத்தினரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamils from Abu Dhabi City of GISCO Emplyees celebrates tamil new year with peoples from Pakistan, Bangladesh, Sri lanka and north indian states of Bihar, Gujrat, Andhra, kerala and Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X