For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

21ல் துபாயில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவினை நினைவு கூறும் சிறப்பு நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

Vivek 150: A special programme in Dubai on sept. 21
துபாய்: துபாய் இந்திய கன்சுலேட் 'விவேக் 150' எனும் சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தினத்தை நினைவு கூறும் விதமாக அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க சொற்பொழிவினை நினைவு கூறும் சிறப்பு நிகழ்ச்சியை 21.09.2013 அன்று மாலை 6 மணிக்கு நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சிக்கு இந்திய கன்சல் ஜெனரல் சஞ்சய் வர்மா தலைமை வகிக்கிறார். அமெரிக்க தியானப் பயிற்சியாளர் பிலிப் கோல்ட்பெர்க் வருங்காலத் தலைமுறைக்கு சுவாமி விவேகானந்தரின் செய்தி எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவினை நிகழ்த்த இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து கிளாசிக்கல் ரிதம் அமைப்பின் சார்பில் நடன நாடகம் நடைபெறும்.

நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்னதாக மாலை 5.30 மணிக்கு விவேகா தர்ஷன் எனும் கண்காட்சி நடைபெறும். கண்காட்சியினை கோவிந்தாஸ் ரெஸ்டாரென்ட்டின் நிர்வாக இயக்குநர் மஹேஸ் அத்வானி துவக்கி வைக்கிறார்.

சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தின விழா இந்தியா மற்றும் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. இந்திய அரசு சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது பிறந்த தின விழாவினை 2013 ஆம் ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என தீர்மானித்து பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக துபாய் இந்திய கன்சுலேட்டின் சார்பில் 1893 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஆற்றிய உரையினை நினைவு கூறும் விதமாக இச்சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவதாக இந்திய கன்சுலேட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Indian consulate in Dubai has arranged for a special programme on september 21 to 
 mark Swami Vivekananda's historic speech at Chicago during the World Conference of Religions. This programme is part of Swamiji's 150th birth anniversary celebrations by the Indian consulate. 
 
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X