மதம் பிடித்தவர்களுக்கு...!
நதிக்கரை தோன்றி, சமவெளி நோக்கி
மனிதம் பாய்ந்த காலம் முதலாக
நடந்து கொண்டுதானிருக்கிறது இந்த
மதம் பிடித்த மனித விளையாட்டு
மதத்திற்குள் புகுந்து ஞானத்தை
தேடிக் கொண்டே இருங்கள்
பூமியின் வெளிக்கு அப்பால்
கிழக்கு மேற்கு தேடுவது போல
சமயங்களும் சம்பிரதாயங்களும்
ஒட்டிக் கொண்டு விட்டன சமூகத்துடன்
உடம்போடு ஒட்டிக் கொண்ட
வியாதியைப் போலவே
எங்கோ ஓர் மனிதனின் விசித்திர
கற்பனையில் பிரசவித்த கடவுள் கையில்
சகல உயிர்களும் சர்வ பத்திரமாய்
சுய ஒழுக்கம் .. அப்படீன்னா?
தொழில் தர்மம் .. தேவையே இல்லை
பிழைக்கத் தெரிந்திருந்தால் போதுமானது!
புண்ணியம் போதவில்லையென்றால் ..
இருக்கவே செய்கிறது கோயில் உண்டியல்.
தரிசனமென்பது தனிமனித சாத்தியமே அன்றி
கோஷமிட்டு அலையும் கூட்டத்திற்கு அல்ல,
அது காவி அணிந்திருப்பினும் சரி
கருப்பு அணிந்திருப்பினும் சரி.
மனித அபத்தங்களுக்குத் தீர்வான
ஞானச்சரக்கு எந்தக் கடையிலும்( மத அமைப்பிலும்)
மொத்த விலைக்கு இல்லவே இல்லை.
சமைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கானதை
நீங்களாகவே ..
விடியும் வரைக்குமென்றாலும் விழித்தே இருங்கள்
விடுதலைக்கான கீறல் விண்ணில் தெரியும் வரை ..
இல்லையேல் ..?
பச்சையோ,வெள்ளையோ
காவியோ, கருப்போ - உடுத்திக் கொண்டு
கிளம்பலாம் வாருங்கள் - நமக்குப் பிடித்த மதத்தை
பிறர்க்கும் பிடிக்கச் செய்ய ...
- அனந்த்([email protected]) இவரது முந்தைய படைப்பு:
1. புரிந்தால் சொல்லுங்களேன்...
2. அயல் தேசத்து அடையாளங்களாய்...
3. க(டல்)ண் நீர்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications