மண்ணில் கலந்த பிஞ்சுவிதைகளே
நிவீர் மாண்ட செய்தி காதில் பாய
தீயொன்று செவிக்குள் புகுந்தது
கடைசிக் கணத்தை எண்ணிப்பார்க்க
கண்கள் சொரிகிறது ஆறாகி
நாளைய விழுதுகள் என்று இருந்தோம்
இன்றே இவ்வுலகை விட்டுப்போனதென்ன?
பெற்றவர்கள் பதைத்து துடித்திருக்க
பாவிகள் எம்மைவிட்டு சென்றதென்ன?
பரந்த பூமியில் வாழ இடமில்லையென்றோ
விரைந்து நிவீர் விண்ணகம் சென்றீர்
பாவிகளாய் நாமிங்கு பரிதவித்துக் கிடக்க
தோழர்கள் கூடி நீங்கள் ஓடிமறைந்தீரே
ஆவி துடிக்குதிங்கே மேனி எரியுதிங்கே
பாதம் இரண்டும் தரைபடிய மறுக்குதிங்கே
காணும் காட்சியெல்லாம் மனக்கண்ணில்
மரணித்த மணித்துளியை எண்ணியிங்கே
காட்டித்தான் எம்மை இங்கே
கசக்கிப் பிழிகிறது
வாழும் நிமிடத்தில் எமக்கு நீவிர்
மரணத்தைக் காட்டி சென்றதென்ன?
வாழ்வின் சுமையை சுமக்குமுன்னே
சாவின் துணையைத் தேடினீரே
மண்ணில் விழுந்த பிஞ்சுவிதைகளே
மலர்வதற்காய் இருந்த மொட்டுகளே
காலனின் கண்களில் பட்டதினால்
தீயென்று கதை பேசி உங்களை
கருக்கிக் கசக்கி எடுத்துவிட்டான்
ஆற்ற மொழியேதும் ஏதும் இல்லை
ஆற்றுவார் தான் யாருமில்லை
சுற்றுலா போனதாய் எண்ணிக்கழிக்க
காலை நீர் போகும் காட்சிவந்து
ஈட்டியாய் நெஞ்சில் பாய்ந்து
வேதனையை தூண்டுதிங்கே
எம் இனிய செல்வங்கே
வாழ்ந்து முடித்து நீங்கள்
வையகம் விட்டு போனாலும்
எம் ஆவிபிரியும் மட்டும்
எம்மை விட்டு இந்நிகழ்வு
பச்சை மரத்து ஆணிபோல
பதிந்து தான் கிடக்கும் இங்கே
உங்கள் பிஞ்சுப் பாதங்களுக்கு
எங்கள் கண்ணீர் பூக்கள்......
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications