மீண்டும் பாடுமா மீன்?
அமைதியாக
அலையடித்துக் கொண்டிருந்த
சிறுகுளத்தில்
ஓர் காலம்
மீன்கள் பாடினவாம்.
மட்டு நகர் வாவியழகும்,
மாமாங்கக் கோவிலழகும்,
கொட்டோ கொட்டெனக்
கொட்டிக்கிடக்கும்
நெல்வயல்களின்
நிறை மணியழகும்.
கொக்கட்டி மரங்களின்
கொப்பரில் தூங்கும்
தேன் வதைகள் அழகும்,
வெட்டி எடுக்கையில்
குத்தி விட்டுப்போகும்
தேனீக்களின் பேரழகும்.
மட்டுநகர் வாவியின்
மீன்கள் பாடினவாம்.
மீன் பாடும் தேனாடென்று
புலவர்கள் பாடினராம்!
தமிழையும் வீரத்தையும்
தாலாட்டில் கலந்தூட்டி
பிள்ளைகளை வளர்த்த
பெற்றோரைப் பாடினவாம்.
சுற்றமும் நட்பும்
சூழ வாழ்ந்திருந்து
நெற்றி வியர்வைகளை
நெல்மணியாக்கிய
மக்களைப் பாடினவாம்.
பெளர்ணமி நாட்களில்
பகலவன் தாழ்ந்த பின்னர்
கடலரசன் பாட்டுக்கு
வாவி மகள் ஆடினாளாம்.
யாரின் சாபமோ
யார் செய்த பாவமோ
ஊரே ஒரு பொழுதில்
ஓய்ந்து போனதே!
சோறுடன் தமிழுணர்வை
பிசைந்தூட்டி வளர்த்தவர்கள்
கசிந்த விழியோரம்
காய்ந்து கிடக்கிறதே!
விதைக்காலமே காத்திருக்கும்
விளைநிலங்கள்,
துப்பாக்கிச் சன்னத்தால்
துளையுண்ட தேன் கூடுகள்,
இரையாத கடல்,
ஆடாத வாவி,
சோகப் பெருமூச்சில்
நெட்டுயிருக்கும்
மக்கள்
அவர்களுடன் நானும்
கேட்கும் ஒரே கேள்வி!
மீண்டும் பாடுமா
மீன்?
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications