கடலுக்கு ஒரு கடிதம்- கோவி.கண்ணன்
கடல் தாயே! என்றழைத்த எங்களுக்கு
இதுதான் உன் அசுர அணைப்பா?
உப்புக்கு உன்னிடம் பஞ்சமா?
எங்கள் கண்ணீரையும் சேர்த்தெடுத்து சென்றாய்!
கொடுவாய் மீன் தெரியும்!
உன் சுனாமி கொடுவாய் தெரியாது!
வஞ்சிரமீனுக்கு வலை வீசத் தெரிந்த நாங்கள்
உன் வஞ்சக அலையின் விலை தெரிந்திருக்கவில்லை!
உன்னில் செம்மீன் பிடித்த எம்மக்களை
விண்மீன் பிடிக்கவா விண்ணுக்கழைத்தாய்?
உன் கரையில்
மீன்களை உலர்த்தியதற்காகவா
இன்று எங்களை உலர்த்திவிட்டாய்?
இலங்கை கேட்கிறது.
இன்னும் எந்த இராவணனுக்காக
இப்படியொரு படையெடுப்பு?
செந்தமிழகம்
வெந்த தமிழகமானது!
மாலத்தீவு மரண ஓலத்தீவானது!
நாகப்பட்டினம்
உன்னால் சோகப்பட்டினமானது!
அழகு அந்தமான்
அலங்கோலமானது!
உணவுக்கும்
உப்புக்கும்
எங்கள் உயிர், உறவுகள், உடைமைகள்?
உன் விலை ரொம்பவும் அதிகம்!
அழிந்துவிட்டோம் என்று எண்ணாதே!
மீண்டும் எழுவோம்!
இப்புத்தாண்டில் உன் அலைகளைப்போல
பன்மடங்கு!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications