உயிர்ச் சமாதி
சிணுங்கலாய் சிரித்து
தளும்பும் நீர் சுமந்து
உயிர்ப்பை தந்த
நம் தெருப் பெண்கள்- அவர்களால்
குளுமை வழிந்த நம் வாசல்கள்...
அந்தியில் அகல் ஏற்றிய பின்பே
அவர்களின்
ஈரக் கால் தடங்களும்- அவை
ஈனும் கொலுசொலிகளும் இன்றி
அமைதியாயின நம் முற்றங்கள்
வேர்க்க வேர்க்க ஓடி ஆடி
வேண்டும் மட்டும் அள்ளிப்பருகி
உயிர் நிரப்பிக் கொண்டோம்
விளையாட்டுப் பருவத்தில்...
வாசல் தொட்டியில்
நீர் நிரப்ப நிரப்ப
வழிபோக்கிக் கன்றுகள்
கழுத்து மணி அசைத்து
கருவிழி உருட்டி
மெதுவாய் பருகின
குட்டி ஆடுகளும்
குருவி காக்கைகளும்
குளித்தும் கும்மாளமிட்டன
இனிய நினைவுகள் தான்...- ஆனால்...
இப்போது இறந்த காலத்தில்
வரலாறாய் மாறி
வறண்டுதான் போனாள்...- அதற்காக...
குப்பையிட்டு மூடி
குழைத்து சிமெண்ட் பூசி
கூடுதலாய் ஓர் அறையா?
இன்றில்லை என்றாலும்
என்றேனும் ஓர் நாளில்...
ஊற்றுக் கண் திறப்பாளே...
கோமாவில் இருந்தாலும்
அம்மா அம்மாதானேடா...
உயிர்ச் சமாதி செய்வாயோ?
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications