ஆயாசம்- பிரபு
படிக்கட்டில் விரைகையில்
மிஞ்சிய காலு-டன்
ரத்தச் சகதியாய்
தரையோடு தவழ்ந்து படர்ந்த
உடலிலிருந்து தலையுயர்த்தும்பிச்சைக்காரன்
வெடித்த மாதுளம்பழமாக
சிந்திச் சிதறும்
கூட்டத்தோடு வந்து நிற்கும் ரயில்
இருக்கையிலமர்ந்தவர்
எழப்போகிறாரா
என்பதையறியும்
கண்கள், உடலசைவுகளின் மொழிகளைப்
படிக்கும் மனப்பயிற்சி
அடுத்தவரின் இடுப்பில்
முழங்கை முட்டி கொண்டழுத்தி
கிடைத்த இடைவெளியில்
முந்திச் சென்று
இருக்கையில் அமரும்
உடல் வலிமை
சிவப்பு எச்சிற்கறை படர்ந்த
கம்பி தடுத்த சாரளம் வழியே
விரைந்து கடக்கும்,
மறைவின்றி
அத்தியாவசிய தேவை கழிக்கும்
ஏழை மனிதர்கள்,
பாலத்தடியில்
மிஞ்சிய உடல்பலமனைத்தையும் திரட்டி
போதைப் புகையிழுக்கும்நடைப்பிணங்கள்,
பல வண்ணக் குப்பைகள்,
கறுப்பு ஓடைகள்,
அதில்
துணி துவைக்கும், கீரை வளர்க்கும்
அழுக்கு சீலைப் பெண்கள்,
சோம்பித்திரியும்
எதிர்காலத்தைத் தொலைத்த
குழந்தைகள்....
மீண்டும்
ரயில்நிலையப் படிக்கட்டில்
முழங்கைக்கு மேல்
எதுவுமில்லா
குச்சிக் கைககளை விரித்து,
சிலுவையில் அறையப்பட்டவரின்
வடிவில்
என்றும் அமர்ந்திருக்கும்
சட்டையில்லா சிறுவன்,
அவன் முன் சிதறிக் கிடக்கும்
நாணயங்கள்.
மக்கள் கூட்டம் தாண்டி
வாகனங்கள் மறித்து
சாலையை கடந்து
ஓடி
சரியான நேரத்தில் அப்பாடா
என்று
அலுவலக பளிங்குப் படிக்கட்டில்
கால் பதிக்கையில்,
இன்றைக்கு
இது போதும் என்ற
ஆயாசமாக
இருக்கிறது.....
-பிரபு([email protected])
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications