மன மரம்
ஆயிரம் முறை
சொல்லிவிட்டேன் உனக்கு..
அணுஅணுவாய் என் உள்ளில்
துளைத்து, ஈரம் உறிஞ்சிப் பின்,
நான் வறண்டவென, வாடிய இலை உதிர்த்து
ஊராரிடம் பச்சாதாபம் பெற
நீ செய்யும் இக் கிளையாட்டுப் புலம்பல்களை
இன்றோடு நிறுத்தென..
மூட மரமே,
அன்று உதிர்த்துப்போன புன்னகை
அவளிடமே சென்றுவிட்டதாகக் காலக்காற்று
அறிவித்தபின்னும்...
யாரை எதிர்நோக்கி இக் கான்க்ரீட் மேடையில்
மலர்கள் உதிர்த்து வரவேற்கிறாய்?
உன் இலைகள்
வருங்காலங்களில், நிழல்தருமென
எதிர்நோக்கியிருக்கையில்,
இக்கொடூர வெட்டுப்புழுக்களின் எச்சிலில்
சுருண்டு வளைந்து கூடாக...
புழுக்கள், ஏக்கங்களில் வெறுமையாய்
விரியும் தளிர்களையும் உண்டு,
துளையிட்ட இலைகளில்,
பீடித்த நோயைக்காட்டியும்,
பேதை மரமே!
புழுக்களின் தாயாம் இவ்வண்னத்துப்பூச்சியை
வரவேற்று, பூக்களில் நிறம் பாய்ச்சுகிறாய்..இன்றும்...
வளைந்து நெளிந்து கூன் ஏறிய
அந்த நினைவுக்கிளையைமட்டும்
எப்படியாவது ஒடித்துவிடு..
ஏதோ காற்று அடித்ததாக,
ஊருக்குச் சமாதானம் சொன்னவாறு.
என் தனிமைகளில் ஊர்ந்து
உயிரையே உறிஞ்சும் உன் வேர்களின்
கொடூரங்கள் போதும்..
அந்த நினைவுக்கிளையினின்று
என் நிலம் நோக்கி நீளும்
இவ் விழுதுகளையேனும் ஏதேனும்
அயல் நிலங்களில் கொண்டுபோய்விடு
எப்படியாவது..
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications