For Daily Alerts
Just In
என் கனவுலகில்...

இங்கு விடியலே இல்லை...
இரவு மட்டும் தான் ...
இருபத்தி நான்கு மணிநேரமும்...
நான் காத்துக் கொண்டிருப்பேன்...
தங்களின் வருகைக்காக...
கனவுகளில்...
காலமெல்லாம் நான் ரசிக்கும் தங்கள்...
முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்...
சமைப்பேன், துவைப்பேன், துடைப்பேன்...
என் கனவுலகில்...
தங்கள் இல்லத்தரசியாய்...
என் கவிதைகளைக் கொடுப்பேன்...
உங்கள் விமர்சனத்தைக் கேட்பேன்...
உங்கள் கவிதைகளை படிப்பேன்...
ரசிப்பேன்...
நம் இருவருக்கான இந்த உலகம்...
எப்போதும் இரவாகவே இருக்கட்டும்...
விடியவே வேண்டாம்...
- அனாமிகா பிரித்திமாanamikapritima@yahoo.com