For Daily Alerts
Just In
யார் குருடன்?
-கமால்
மின்சார வெட்டு எங்கும் கும்மிருட்டு
கண்கள் இருந்தும் எங்கும் கருமை
சுற்றியுள்ளவை எல்லாம் வெறுமை
நீ இப்போது குருடன் என்றது ஞானம்
நானா குருடன் எனக்கு கண்கள் உள்ளன என்றது அகம்பாவம்
பொறி தட்டியது மூளையில்
கவிதை பிறந்தது அவ்வேளையில்
பிறவிக் குருடனுக்கு விழிகளில் ஒளி இல்லை
என் விழிகளில் ஒளி உண்டு
அவனுக்கு புறக்கண்கள் இல்லை அகக்கண்கள் உண்டு
எனக்கு புறக்கண்கள் இல்லை அகக்கண்கள் உண்டு
கண்கள் இருந்தும் குருடன் நான், கருமையில்
அப்படியென்றால் யார் குருடன்
அவனா நானா?
இருட்டிலிருந்து இன்னும் நான் வெளியே வரவில்லை