மழை நாளிரவு...

அந்த மழை நள்ளிரவு
உனக்கு ஞாபகமிருக்கிறதா?
ஆமெனில்-எத்தனைமுறை
அதை அசைபோட்டிருக்கிறாய்?
யாரிடமாவது பகிர்ந்ததுண்டா?
கடுமிடியும் காரிருளும்
எலும்பு துளைக்கும் குளிரும்
தரை பெயர்க்கும் மழையும்
மழைக்கம்பிகளை சடசடவென
இசைத்துப்போகும் காற்றும்....
அமானுஷ்ய ரகஸ்யங்களை
பறவைகள் மர இலைகளோடு பகிர்ந்துபோன-நமக்குள் மட்டும்
எந்த சலனைத்தையும் ஏற்படுத்தாத
அந்த மழை நள்ளிரவு ஞாபகமிருக்கிறதா?
நீ ஜன்னல் கம்பி வழியாய்-இருளில்
தெரியா உருவங்களை பார்த்திருந்தாய்-அல்லது
ஏதோ யோசித்தபடியிருந்தாய்
நான் அவ்வப்போது
வானம் கிழிக்கும் வெண்கோடுகளையும்
மனம் நிறைய மழைக்குளிரையும்-நம்
வாழ்க்கையில் வந்துபோன விடையறியா
புதிர்களையும் நினைவுகளில் சேகரித்துக் கொண்டேன்...
செவுற்றுக் கோழிகளும் தவளைகளும்
அலறிக்கொண்டிருந்த
அந்த மழை நள்ளிரவு ஞாபகமிருக்கிறதா?
நீதான் இடியென மௌனம் கிழித்தாய்-என்
காலடி பூமி மழைநீரில் கரைவதாய் பட்டதெனக்கு
போகலாமென்றாய்...
நமக்கு மட்டும் சிலையில் பெய்த மழையாயிருந்த
அம்மழைநாளிரவு ஞாபகமிருக்கிறதா?
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது
நீதான் அழைத்துப் போனாய்
மூன்று மணி நேரமிருக்கலாம்-கூடவோ?
நீ உன் கன்னித்ன்மையை மீட்டிருந்தாய்.
ரத்தமும் சதையுமாய் ஏதையோ
எடுத்துப் போனார்கள் - நாமும்
பிள்ளைக்கறி ருசிப்பதாய் பட்டதெனக்கு
நீ போகலாமென்றாய்..
நான் மழையில் நின்றேன்...
அழுதேன்....
நீ நடந்துபோய்க்கொண்டிருந்தாய்...
விடிவெள்ளி முளைக்கும் அக்காலையிலும்
மழை நீடித்தது-நான் வீடுவந்து
உறங்கிப் போனேன்
இன்றும் மழை என் வீட்டு பால்கனி ரோஜாவை அடித்தபடி
எந்த மழையும் ரஸிக்கமுடியா நான்
என் குழந்தையோடு பார்த்திருந்தேன்...
வடுவாய் வலித்திருக்கும்
அம்மழை நாளிரவு ஞாபகமிருக்கிறதா?
ஆமெனில் யாரோடும் பகிர்ந்ததுண்டா?...
-ரிஷிசேது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications