"இனி IT சர்வீஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது.." எச்சரிக்கை கொடுத்த அரவிந்த் சுவாமி! இந்தியாவுக்கே சிக்கல்?
சென்னை: சமீபத்தில் ஆந்த்ரோபிக் நிறுவனம் தானாகவே கோடிங் செய்யும் ஏஐ டூலை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல மணி நேரம் எடுத்துக்கொள்ளும் கோடிங்கை எளிதாகச் செய்து முடிக்க முடியும். இது ஐடி துறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் எனக் கூறியுள்ள நடிகர் அரவிந்த் சுவாமி, இனி எந்த விஷயங்கள் முக்கியத்துவம் பெறும் என்பது குறித்தும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவர் அரவிந்த் சுவாமி. தளபதி படத்தில் நடிகராக அறிமுகமான அரவிந்த் சுவாமி, ரோஜா படத்தின் மூலம் ஹீரோவானார். அதன் பிறகு அவர் பல்வேறு படங்களிலும் நடித்துள்ளார். இடையில் சில ஆண்டுகள் திரைத் துறையில் இருந்து விலகி இருந்த அவர், மீண்டும் ரோஜா படத்தின் மூலம் 2013ல் கம்பேக் கொடுத்தார். இப்போதும் படங்களில் அவர் நடித்து வருகிறார்..

அரவிந்த் சுவாமி
அவர் இப்போது வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் நடிகர் தானே.. அவர் ஏன் ஏஐ பற்றிப் பேசுகிறார் எனச் சந்தேகம் வரலாம்.. அரவிந்த் சுவாமி நடிகர் மட்டுமில்லை.. அவர் தொழிலதிபரும் கூட.. ஐடி நிறுவனம் ஒன்றையும் வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். இதன் காரணமாகவே ஏஐ குறித்தும் ஐடி துறையின் எதிர்காலம் குறித்தும் அவர் கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது.
எச்சரிக்கை
இது தொடர்பாக நடிகர் அரவிந்த் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் சமீபத்தில் உமாஜின் 2026 மாநாட்டில் உரையாற்றினேன். நாம் ஒரு ஷாக்லெட்டன் தருணத்தில் இருக்கிறோம். நமது ஈகோவை விட்டுவிட்டு, இப்போதிருக்கும் சாப்ட்வேர் சேவைகள் இனி பொருத்தமற்றவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு கோடிங்கை பொதுவானதாக்குகிறது. ஊழியர் எண்ணிக்கை மற்றும் ஆர்பிட்ரேஜ் மாடல்கள் இனி நீடிக்காது.
சாப்ட்வேர் இன்ஜினியர், கட்டமைப்பு, டொமைன் உரிமை மற்றும் AI- கட்டுப்படுத்தப்பட்ட டெலிவரி போன்றவை தொடர்ந்து முக்கியத்துவம் பெறும். கோடிங் ஜனநாயகப்படுத்தப்பட்டது சிறந்த விஷயம். உங்கள் யோசனைகளை டெவலப் செய்து, அதை ஒரு ப்ராடக்ட்டாக மாற்றுங்கள். இரண்டு வாரங்களில் ஏஜெண்டுகளைக் கொண்டு C கம்பைலரை ஆந்த்ரோபிக் உருவாக்கிய அறிவிப்பு நமக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
I recently spoke at Umagine2026 where I said that we are in a Shackleton moment. We have to let go of our ego and accept the fact that software services as we know it is no longer relevant. AI commoditises code. The head count and arbitrage model will be broken. Software…
— arvind swami (@thearvindswami) February 6, 2026
ஆந்த்ரோபிக்
ஆந்த்ரோபிக் என்ற அமெரிக்காவின் ஏஐ நிறுவனம் சமீபத்தில் ஏஜென்ட் டீம்ஸ் என்ற வசதியைக் கொண்டு வந்து இருந்தது. இந்த டூலின் கீழ் பல்வேறு ஏஐ ஏஜெண்டுகள் ஒருங்கிணைந்து வேலை செய்யும். இதன் மூலம் பல ஆயிரம் கோட்களை கூட மிக எளிதாக அடித்துவிடலாம். இதை வைத்து வெறும் 2 வாரங்களில் ஆந்த்ரோபிக் நிறுவனம் C கம்பைலரை உருவாக்கியுள்ளது. இது வரும் காலத்தில் மேம்படும் நிலையில், கோடிங் என்பதே தேவையில்லாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியா ஐடி சந்தை
இந்தியா ஐடி சந்தைக்கு இது அச்சுறுத்தலாகவே அமையும். இந்திய ஐடி சந்தை முழுக்க முழுக்க இதுபோன்ற கோடிங்கை சார்ந்தே இயங்குகிறது. அந்த இடத்தை ஏஐ எடுத்துக் கொண்டால் இந்திய ஐடி சந்தை மிக மோசமாகப் பாதிக்கப்படும், பல லட்சம் ஐடி தொழிலாளர்கள் இதனால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.
இதைக் குறிப்பிடும் வகையிலேயே அரவிந்த் சுவாமி இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார். ஊழியர் எண்ணிக்கை மற்றும் ஆர்பிட்ரேஜ் மாடல்கள் இனி நீடிக்காது என்றும் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என அரவிந்த் சுவாமி கூறியுள்ளார்.
-
இனி உலகை ஆளப்போவது 'மாங்கா' நிறுவனங்கள் தான்.. மிக முக்கியமான மாற்றம்! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
ஒரு சொட்டு கூட பெட்ரோல் இருக்காது.. ஆனாலும் வண்டி பட்டாசாக ஓடும்.. அதென்ன E100 எரிபொருள்? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
Claude Fable 5: வங்கிகளை மொத்தமாக முடக்கும் திறன் கொண்ட AI..? அமெரிக்க அரசு உத்தரவால் ஆந்த்ரோபிக் ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா?












Click it and Unblock the Notifications