பல ஆயிரம் கோடி கொடுத்து.. உலகின் டாப் 11 மூளைகளை.. மொத்தமாக தூக்கிய மார்க் ஜுக்கர்பெர்க்.. ஏன்?
சென்னை: உலகின் டாப் 11 மூளைகளை மெட்டா நிறுவனம் பணிக்கு எடுத்துள்ளது. தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் அதிரடி நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் உலகின் தலைசிறந்த 11 மேதைகளைத் பணிக்கு எடுத்துள்ளது.
இவர்கள் மூலம் 'மெட்டா சூப்பர் இன்டெலிஜென்ஸ் லேப்' என்ற புதிய உயரடுக்கு பிரிவை உருவாக்கும் பணிகளை தொடங்கியுள்ளது. இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதனைப் போலவே சிந்திக்கவும், பகுத்தறியவும், பதிலளிக்கவும் கூடிய திறனை இது கொண்டிருக்கும்.

அதாவது ஓபன் ஏஐ, ஜெமினை போன்ற ஏஐக்கு சவால் விடும் வகையில், அதை விட சிறப்பாக, அதிக ஆற்றல் கொண்ட ஏஐயை இவர்கள் உருவாக்க உள்ளனர் என்று கூறப்படுகிறது.
ஒரு பில்லியன் டாலர்
இந்த AI நிபுணர்கள் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு ₹66 கோடி முதல் ₹165 கோடி வரை (சுமார் $8 மில்லியன் முதல் $20 மில்லியன் வரை) சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ₹830 கோடி ($100 மில்லியன்) வரை முதல் - நாள் போனஸாக வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. OpenAI, Google DeepMind மற்றும் Anthropic போன்ற நிறுவனங்களுக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் தயாராகி வருவதால், தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் இதில் இறங்கி அடிக்க திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
இந்த 11 பெரிய மூளைகள் யார்?
இந்த 11 AI ஆராய்ச்சியாளர்களும் OpenAI, Google Research, DeepMind மற்றும் Anthropic போன்ற மதிப்புமிக்க ஆய்வகங்களில் இருந்து வந்தவர்கள். ChatGPT, Gemini மற்றும் Llama போன்ற இன்றைய சக்திவாய்ந்த AI கருவிகளை வடிவமைத்தவர்கள் இவர்கள்.
டிராபிட் பன்சால் OpenAI-லிருந்து வந்தவர். OpenAI நிறுவனத்தின் "o-series" மாடல்களுக்குப் பின்னால் உள்ள ஏஐ அமைப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர். சிந்தனை செய்யும் ஏஜெண்டாக செயல்பட AI-க்கு பயிற்சி அளிப்பதில் இவர் நிபுணர்.
சுச்சாவ் பி, OpenAI-யைச் சேர்ந்தவர், உலகின் மிகவும் மேம்பட்ட AI மாடல்களில் ஒன்றான GPT-4o-வின் குரல் மற்றும் பார்வை அம்சங்களை உருவாக்க உதவினார். இவரது பணி AI பேசவும், கேட்கவும், படங்களைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
ஹூய்வென் சாங் Google Research-ல் பணிபுரிந்தார். Muse மற்றும் MaskIT போன்ற கருவிகள் மூலம் மிகவும் யதார்த்தமான AI படங்களை உருவாகும் திட்டத்தை நிறைவேற்றியவர். AI பார்க்கவும், கற்பனை செய்யவும் இவரது நிபுணத்துவம் முக்கியமானது.
ஜி லின், GPT-4-ன் கட்டமைப்பிலும் பல பதிப்புகளிலும் பணிபுரிந்தார். மொழியை ஆழமாகப் புரிந்து கொள்ளும் சிறந்த மற்றும் வேகமான மாடல்களை உருவாக்கியதற்காக புகழ்பெற்றவர்.
ஹாங்யு ரென், OpenAI நிர்வாகி, இவர் GPT-4-ன் மினி மாடல்களை வடிவமைக்க உதவினார். மேலும் குரல் மற்றும் காட்சி பணிகளில், AI-ஐ வேகமாகவும் திறமையாகவும் மாற்றுவதில் கவனம் செலுத்தினார்.
ஜியாஹுய் யு ஒரு புலனுணர்வு நிபுணர். இவரது பணி AI மாடல்கள் பார்த்து, கேட்பதை ஆய்வு செய்வது. சிக்கலான காட்சி உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் GPT-4 திறனை மேம்படுத்தியதற்காகவும் இவர் அறியப்படுகிறார்.
ஷெங்ஜியா ஜாவோ ChatGPT-க்கு பின்னால் இருக்கும் மூளையில் இவரும் ஒருவர்.
ஜோயல் போபர் Anthropic குழுவில் இருந்து வந்தவர். முதலில் Meta-வின் ஆரம்ப பொறியியல் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். AI அமைப்புகளை மிகவும் நம்பகமானதாகவும் அளவிடக்கூடியதாகவும் மாற்றுவதில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.
ஜாக் ரே Google DeepMindல் பணி புரிந்தவர். Gemini, Gopher மற்றும் Chinchilla போன்ற சக்திவாய்ந்த மாடல்களை உருவாக்க உதவினார்.
ஜோஹான் ஷல்க்விக் குரல் தொழில்நுட்ப வல்லுனர். Google மற்றும் Sesame-ல் பல முக்கிய திட்டங்களுக்கு தலைமை தாங்கினார். இவரது பணி AI எப்படி பேசுகிறது என்பதை வடிவமைப்பது.
பீ சன், DeepMind நிபுணர் ஏஐ செயல்பாடுகளை திட்டமிட கூடியவர்.
இப்படி உலகின் டாப் ஏஐ நிபுணர்களை மொத்தமாக மார்க் மெட்டா நிறுவனத்திற்காக களமிறக்கி உள்ளார். இதுதான் எதிர்காலம் என்பதால் மார்க் துணிந்து இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் மெட்டா உருவாக்க போகும் ஏஐ வரும் காலங்களில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications