2022 ஆம் ஆண்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் - எண் கணித நிபுணரின் துல்லிய கணிப்பு
சென்னை: 2022ஆம் ஆண்டில் பெண் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும். மும்மடங்கு அதிகரிக்கும். பிறப்பு விகிதம் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த ஆண்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்துள்ளார். அவரது துல்லியமான கணிப்பை பார்க்கலாம்.
கடந்த 2 ஆண்டுகாலமாகவே மக்களில் பலருக்கும் பொருளாதார நிலை சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல் என பலரது வாழ்க்கையிலும் கசப்பான பக்கங்களை கொடுத்து விட்டது 2020 மற்றும் 2021ஆம் ஆண்டு.
2022ஆம் ஆண்டு பிறக்கப் போகிறது. பிறக்கப்போகும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று பலருக்கும் ஒருவித எதிர்பார்ப்பு இருக்கலாம். 2022ஆம் ஆண்டில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை துல்லியமாக கணித்து நமது ஒன் இந்தியா நேயர்களுக்காக வழங்கியுள்ளார் எண்கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.

வளர்ச்சி நிறைந்த ஆண்டு
இந்த புத்தாண்டு கூட்டுத்தொகை 6ஆம் எண் வருகிறது. சுக்கிரன் ஆதிக்கம் நிறைந்த இந்த ஆண்டில் கலைத்துறை அபரிமிதமான வளர்ச்சியடையும். கடந்த 2020, 2021ஆம் ஆண்டில் கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி அடைவார்கள்.

அழகு சாதனப்பெருட்கள்
இந்த ஆண்டு அழகு சாதன பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். புதுமையான முறையில் வீடு கட்டுவார்கள். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். வாகன உற்பத்தித்துறையில் புதிய கண்டுபிடிப்புகள் வரும். பெரிய நோய்களுக்கு ஊசி இல்லாமல் மாத்திரை மூலம் குணப்படுத்தும் காலம் ஏற்படும்.

பெண்கள் வளர்ச்சி
பெண் தொழில் அதிபர்கள் அதிக அளவில் உலக அளவில் புகழ் பெறுவார்கள். தொழில் முடங்கி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு தவித்தவர்கள் 5 மாதத்திற்குள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார்கள். கடந்த 2 ஆண்டுகாலமாக இருந்த பொருளாதார பிரச்சினைகள் பின்னடைவுகள் முடிவுக்கு வரும். மிகப்பெரிய மாற்றங்களை மக்களுக்குத் தரும் ஆண்டாக ஆற்றல் மிகுந்த ஆண்டாக 2022ஆம் ஆண்டு அமையப்போகிறது.

துல்லிய கணிப்பு
2022 ஆம் ஆண்டு மூன்று 2ஆம் எண்ணின் ஆதிக்கத்தில் அமைந்துள்ளது. இந்த புத்தாண்டில் பிறக்கும் குழந்தைகள் வருங்காலங்களில் அதி நுட்பமான அறிவைக் கொண்டவர்களாக இருப்பார்கள். ஐக்யூ நிறைய கொண்டவர்களாக இருப்பார்கள். அதிநவீன கண்டுபிடிப்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பார்கள்.

அபரிமிதான வளர்ச்சி
இந்த 2022ஆம் ஆண்டில் நிறைய பேர் சொகுசாக வாழ நினைப்பார்கள். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். வாழ்க்கைத்தரம் மிகப்பெரிய உயர்வை அடையும் நாட்டின் ஜிடிபி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை எட்டும். இயற்கை விவசாயம், இயற்கை உரமும், பால் பொருட்களின் உற்பத்தியும் அபரிமிதமான வளர்ச்சியடையப்போகிறது.

ஆற்றல் மிகுந்த பெண்கள்
உலகளாவிய அளவில் ஆன்மீகவாதிகள் அதிகரிப்பார்கள். உலகம் முழுக்க நீர் நிலைகள் நிரம்பி வழியும். மழை வெள்ளம் அதிகரிக்கும். பெண் குழந்தைகளின் பிறப்பு அதிகரிக்கும். மும்மடங்கு அதிகரிக்கும். பிறப்பு விகிதம் பிரம்மாண்டமாக இருக்கும். இந்த ஆண்டில் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். பெண் அரசியல்வாதிகளின் ஆதிகம் அளப்பறியதாக இருக்கும். ஆற்றல் மிகுந்த பெண்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. பல துறைகளில் ஆண்கள் அடங்கிப் போக வாய்ப்பு உள்ளது. 2022ஆம் ஆண்டிற்கான பொதுவான பலன்களைப் பார்த்தோம். இனி 1 முதல் 31 வரையிலான தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2022ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்று கணித்துக் கூறியுள்ளார் எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன்.