குரு கடகத்தில் உச்சம்: 3 ராசிகளுக்கு யோகம்..உலகிற்கு காத்திருக்கும் அபாயங்கள்.. அதிர்ச்சி கணிப்புகள்
Guru peyarchi Palangal: 2026 ஆம் ஆண்டின் மிக முக்கியமான கிரக மாற்றமாக கருதப்படும் குருப்பெயர்ச்சி, உலக அரசியல் முதல் பொருளாதாரம் வரை பல துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் இந்த காலகட்டத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்ட யோகங்கள் காத்திருக்க, உலகளவில் போர் பதற்றம், பொருளாதார சிக்கல்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் தமிழக அரசியலில் பரபரப்பான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
குரு பகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். 2026 ஆம் ஆண்டின் குருப்பெயரச்சி திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் 2 ஆம் தேதி அதிகாலை 1.50 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். கடகம் என்பது சந்திரனின் வீடு. சந்திரனின் வீட்டில் குரு உச்சம் பெறுகிறார்.

3 ராசிக்கு யோகம்
குரு உச்சம் பெறும்போது மிகுந்த பலத்துடன் காணப்படுவார். 5 ஆம் பார்வையாக விருச்சிகத்தைப் பார்வையிடுவதால் விருச்சிக ராசியினருக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். சமசப்தம பார்வையாக மகர ராசியை குரு பகவான் பார்ப்பதால் பெரிய யோகங்களைக் கொடுக்கும். ஜென்ம சனியில் இருக்கக்கூடிய மீன ராசியை குரு பகவான் பார்க்கிறார். இதனால், மீன ராசியினருக்கு அற்புத பலன்களும், சந்தோஷங்களும் ஏற்படும்.
குரு பகவான் கடக ராசியில் வந்து இருக்கக்கூடிய காலத்தில் நிறைய நன்மைகள் நடந்தாலும் உக்கிரமாக இருக்கும் சனி பகவானால் பெரிய பாதிப்புகள் கண்டிப்பாக உலகத்திற்கு ஏற்படக்கூடிய வாய்ப்பு ஏற்படும். போர் போன்ற பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தாலும், புதிய புதிய வியாதிகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வரி மேல் வரி
மனிதனின் வக்கிர புத்தியால் ஈரான் போர் தவிர மற்ற நாடுகளுக்கிடையேயும் பிரச்சனை ஏற்படும். மக்களுக்கு உலகம் முழுவது வரி மேல் வரி போடப்படும். உணவு தட்டுப்பாடுகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. பணத்தை கொடுத்து கூட உணவை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஆயூதங்களால் பாதிப்புகள் வரும் வாய்ப்புள்ளது.
இயற்கை சீற்றங்களான சுனாமி, கடல் மாசுபடுவது, கடல்வாழ் உயிரினங்கள் கெடுவது, மலைப் பிரதேசங்களில் சீற்றம் ஏற்படுவது, அதீத மழைப் பொழிவு, நெருப்புகளால் பெரிய பாதிப்பு போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. நிலையற்ற அரசாங்கத்தால் பாதிப்புகள் வரும். ராஜியங்கள் கவிழும் சூழ்நிலை ஏற்படும். மக்களுக்கு வேலைவாய்ப்புகளில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தங்கம் விலை உயரும்
சனிக்கு குரு பார்வை கிடைப்பதால் ஏராளமான பிரச்சனைகள் கொடுக்கும். இதுமட்டுமல்லாமல் டிசம்பர் மாதத்தில் ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் நிறைய அநீதிகள் உலகத்தில் ஏற்படும். தங்கத்தின் விலை அதிரடியாக உயரும். எதிர்பார்க்காத பல விஷயங்கள் நடக்கும். தொழில் ரீதியாக நிறைய பாதிப்புகள் ஏற்படும்.
வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்தியர்களின் வளர்ச்சி, முன்னேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான வாய்ப்பு, வேலை பறிப்பு போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. சொத்துகளை விற்றுவிட்டு வரும் சூழல் வருவதற்கான வாய்ப்புள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது முதலீடுகளை 70 சதவீதம் தாய்நாட்டில் வைத்திருப்பது நல்லது.
புரட்சிகள் ஏற்படும்
நிலையற்ற தன்மைகள், அரசியலில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள், தலைவர்களுக்கு பாதிப்பு, சிறைத் தண்டனைகள் போன்றவை வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆன்மீகவாதிகள், கார்ப்பரேட் சுவாமிகள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம். மருத்துவத்தில் புரட்சி, விவசாயத்தில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி, சாஃப்ட்வேர் புரட்சி, விஷூவல் கம்யூனிகேஷன் வளர்ச்சி என பல்வேறு வளர்ச்சிகள் ஏற்படும். டெக்னாலஜி தொடர்பான விஷயங்கள் மக்களுக்கு எளிமையாகும்.
எளிமைப்படுத்தப்பட்ட ஆயுதங்களால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பு உள்ளது. வர்க் ஃப்ரம் ஹோமில் வேலை செய்யும் நிலை ஏற்படும். பெட்ரோலியம், கேஸ் போன்ற விஷயங்களில் இருந்து மாற்றி எலக்ட்ரிக், சூரிய ஒளிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சூழல் ஏற்படும். மாற்று சக்திகள் ஏற்படும். அரசு நாடுகள் வேறு வேறு உத்திகளை கையாண்டு வருமானத்தை தேடிக் கொள்ளும் காலம் ஏற்படும். நிறைய பகுதிகள் சுற்றுலாத் தலங்களாக மாற்றப்படும்.
தமிழக அரசியல்
எதிரி நாடுகளிடம் இந்திய நாடு, இந்திய தலைவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். அடுத்த ஜனவரி மாதம் வரை தமிழக அரசியல் மிகவும் களேபரமாக இருக்கும். ஸ்திரமற்ற தன்மை ஏற்படும். கூட்டாளிகள் விஷயத்தில் எல்லா தலைவர்களும் கவனமாக இருக்க வேண்டும். பதட்டத்தைக் கொடுக்க கூடிய வகையில் கிரக நிலைகள் இருக்கும். 2027 ஜனவரி 28 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசியல் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. பொறுமை காத்து செயல்படுவது ஏற்றத்தைக் கொடுக்கும்.
உடனிருக்கும் செய்யும் தவறுகளால் ஆளக்கூடியவர்கள் பாதிக்கப்படுவதற்கான அமைப்பு உள்ளது. தேக ஆரோக்கிய குறைபாடுகள், இயற்கை பாதிப்புகள், நிலநடுக்கம், மலைச் சரிவுகள், கப்பல் பயணங்களில் ஆபத்து, ஆகாய மார்க்கங்களில் பெரிய விபத்துகள், விமான விபத்து போன்றவை வரும் வாய்ப்புள்ளது. கடகத்தை குரு பார்ப்பதால் மஞ்சள் நிற தொழில்கள் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படும். தங்கம் அபரிமிதமான விலை உயர்வை சந்திக்கும். எல்லா விதத்திலும்
அனுகூலம், சந்தோஷம் ஏற்பட மகான்கள் வழிபாடு, சிவன் வழிபாடு, திருச்செந்தூர் வழிபாடு ஏற்றத்தைத் தரும்.












Click it and Unblock the Notifications