For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆடி கடைசி வெள்ளி: அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்.. பால் அபிஷேகம் செய்து வழிபாடு

Google Oneindia Tamil News

சென்னை: ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அம்மன் கோயில்களில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால் சுக்கிரன் அருள் கிடைக்கும் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடி வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் பாலபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. இந்த மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும், குறிப்பாக இந்த மாதத்தில் உள்ள ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.

ஆடி மாதத்தின் அடிப்படை தத்துவமே உன்னை இயக்கும் அதே சக்திதான், ஆங்காங்கு ஆலயங்களில் வெளிப்பட்டிருக்கிறாள். வெளியே தரிசித்த சக்தியை உனக்குள் காண்பதே பிறந்ததன் பயன் என்பதுதான். எனவே, இந்த ஆடி மாதம் முழுவதும் அம்மனின் ஆலயங்களில் திருவிழாக்கோலம்தான். ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆடி அசைந்து வந்த அழகர் கோவில் திருத்தேர்.. கோவிந்த முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் ஆடி அசைந்து வந்த அழகர் கோவில் திருத்தேர்.. கோவிந்த முழக்கமிட்டு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

 அம்மன் சக்தி நிறைந்த ஆடி மாதம்

அம்மன் சக்தி நிறைந்த ஆடி மாதம்

சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் வரும் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அன்றைய தினங்களில், இல்லத்தின் வாசலில் கோலமிட்டு, பூஜையறையில் குத்துவிளக்கேற்றி ஸ்ரீலலிதா ஸஹஸ்ரநாமம் மற்றும் பல அம்மன் பாடல்களைப் பாடுவார்கள். பால் பாயசம், சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை நிவேதனம் செய்து இறைவனை வழிபாடுவார்கள். பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவளித்து, அவர்களுக்கு ரவிக்கை, தாம்பூலம், வளையல், குங்குமச் சிமிழ், சீப்பு, கண்ணாடி, மருதாணி, மஞ்சள் போன்றவற்றைக் கொடுத்து சிறப்பிக்க தேவியின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 புற்றுக்கு பால் வார்த்து வழிபாடு

புற்றுக்கு பால் வார்த்து வழிபாடு

ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்து வழிபட்டனர். இனிப்புத் தேங்காய் கொழுக்கட்டை, உப்பு, காரப் பருப்புக் கொழுக்கட்டை, எள்ளுக் கொழுக்கட்டை ஆகியவற்றை நிவேதனம் செய்து வழிபட அம்மன் வரங்களை வாரி வழங்குவாள்.

மாரியம்மன் கோவிலில் வழிபாடு

மாரியம்மன் கோவிலில் வழிபாடு

ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமைந்துள்ள இருக்கண்குடி மாரியம்மன் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து தடை நீங்க வேண்டி வழிபடுவார்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்தால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை.

மடப்புரம் காளி

மடப்புரம் காளி

திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்வது வழக்கம். கோவிலுக்கு வரும் பக்தர்கள் எலுமிச்சை மாலை சாற்றியும், எலுமிச்சை விளக்கேற்றியும் அம்மனை வழிபாடு செய்தனர்.

சமயபுரம் மாரியம்மன்

சமயபுரம் மாரியம்மன்


திருச்சியில் சமயபுரம் மாரியம்மன், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, உறையூர் வெக்காளியம்மன், நார்த்தாமலை முத்துமாரியம்மன் உள்பட அனைத்து அம்மன் கோயிலில்களிலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் அம்மன் ஆலயங்களில் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மயிலை கோலவிழி அம்மன்

மயிலை கோலவிழி அம்மன்

மயிலாப்பூரில் அருள்பாலிக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன், முண்டகக் கண்ணி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் இன்று காலை முதலே பாலபிஷேகம் நடத்தி வழிபாடு செய்தனர்.

Recommended Video

    பயிர்களை சப்பரம் மீது வீசி பக்தர்கள் சாமி தரிசனம் *Festival
    மாவிளக்கு ஏற்றிய பக்தர்கள்

    மாவிளக்கு ஏற்றிய பக்தர்கள்

    ஆடி கூழ் செய்து அம்மனுக்குப் படைத்து வழிபடுவது வழக்கம். பாம்பு புற்றில் பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிஷேகம் செய்தும் பக்தர்கள் வழிபட்டனர். அம்மனுக்கு மா விளக்கேற்றியும் வழிபாடு நடத்தினர். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. அம்மனுக்கு பாலபிஷேகம் செய்து, வீட்டில் பால்பாயாசம் செய்து அம்மனை வழிபட செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    English summary
    Aadi Kadaisi Velli: Women worshiped in Amman temples with Palabhisegam Aadi kadaisi Velli: Aadi last friday women offering prayer in Amman temple: (ஆடி கடைசி வெள்ளிக்கிழமை ஏராளமான பக்தர்கள் வழிபாடு) The month of Aadi is the auspicious month for Goddess. It is special to worship Balabhishekam in Amman temples on Aadi last Friday. It is believed that the wealth of Venus will increase if the milk is anointed and worshiped on the auspicious Friday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X