அடித்து ஆடும் ரிஷப ராசி.. தொட்டதெல்லாம் ஹிட்டாகும்.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. அம்மனுக்கு விசேஷமான இந்த அற்புதமான மாதத்தில் கடக ராசிக்குள் சூரியன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆடி மாதத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆனி மாதம் முடிந்து ஆடி மாதம் தொடங்கியுள்ளது. கடக ராசிக்குள் சூரியன் வரக்கூடிய மாதம் இது. ஆடி மாதம் என்பது அம்மனுக்கு விஷேசமான மாதமாகும். கோயில் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என்று விழாக்கோலம் பூண்டிருக்கும். குல தெய்வ வழிபாடு, உறவினர்கள் சந்திப்பு என்று கோலாகலமாக இருக்கும். ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரையிலான ஆடி மாதத்தில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்வது மேன்மையை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பதவி மாற்றம் கிடைக்கும். உங்களுடைய வார்த்தைகளுக்கு குடும்பத்திலும், சமுதாயத்திலும் மதிப்பு கிடைக்கும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம்
மயக்கம், தலைசுற்றல், காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவுப் பிரச்சனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பற்களில் பிரச்சனை இருப்பவர்கள் எச்சரிக்கை தேவை. வேற்று மதத்தினர் மூலமாக ஆதாயம் கிடைக்கும். அரசு கெளரவம் கிடைக்கும். அரசுத் துறை வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கட்டாயமாக வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும்.
குடும்பம்
குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். நம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். இதுவரை நீங்கள் செய்து வந்த வேலைகளில் இருந்து வந்த இழுபறியான நிலைமைகள் மாறும். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு தொடர்பான விஷயங்களில் பரிபூரணமாக நிவர்த்தி ஏற்படும். சோம்பல்களால் நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். அதனால், சோம்பலைத் தவிர்ப்பது நல்லது.
முடிவுகளால் முன்னேற்றம்
எந்தவொரு வேலையை எடுத்தாலும் அடுத்தடுத்து முடிவுகளை எடுத்து முயற்சிகளைச் செய்வது அற்புதமான ஏற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபங்கள் அதிகரிக்கும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வாகனங்களில் நல்ல அனுகூலம் காணப்படும். முதலீடுகளை செய்வீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் மனம் விட்டுப் பேசுவது நல்லது.
சுப காரியங்கள்
ரிஷப ராசிக்கு இந்த மாதம் முழுவதும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசியிலேயே இருக்கிறார். சந்திரன் லாப ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் நல்ல செய்திகள் நடைபெறும். சுப காரியங்கள் நடக்கும். தொட்டது துலங்கி எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். உத்யோகம், தொழிலில் முன்னேற்றம் காணப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. மனதில் அமைதி நிலவும்.
-
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. விருச்சிக ராசிக்கு அடிக்கும் மெகா ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அடிக்கும் லக்கி ஜாக்பாட்.. தொழிலில் அற்புதமான முன்னேற்றம் -
Kanni: கன்னி ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. வாயில தான் கண்டமே -
Simmam Rasi Palan: "குறி வச்சா இரை விழும்".. சிம்ம ராசிக்கு தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு வீடு, நிலம்னு செட்டிலாகும் யோகம்.. கவர்ன்மென்ட் வேலை கன்ஃபார்ம் -
Mithunam Rasi Palan: மிதுன ராசிக்கு பிரகாசமான மாற்றம்.. தொழிலில் அடிக்கும் ஜாக்பாட் -
Rishabam Rasi Palan: லக்கி பாஸ்கராக மாறும் ரிஷப ராசி.. திடீர் அதிர்ஷ்டத்தால் அற்புதமான முன்னேற்றம் -
Mesham Rasi Palan: மேஷம் ராசிக்கு சொந்த வீடு வாங்கும் யோகம்.. இந்த வார பலன்கள்.. முழு விவரம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications