மிதுன ராசிக்கு மண்ணும் பொன்னாக மாறும் காலம்.. தொட்டதெல்லாம் ஹிட்டாகப் போகுது.. என்ஜாய்
ஆடி மாத பலன்: ஆனி மாதம் நிறைவடைந்து ஆடி மாதம் தொடங்கவுள்ளது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் இந்த அற்புதமான ஆடி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றங்களால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் ஏற்படும். ஆனி மாதம் முடிந்து தற்போது ஆடி மாதம் பிறக்கப் போகிறது.

ஆடி மாதம் என்பது அம்மனுக்குரிய மாதமாகும். ஆடித் திருவிழா, குலதெய்வ வழிபாடு, நல்ல காரியங்கள், உணவு தானமாகக் கொடுப்பது, அனைத்து கோயில்களின் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சூரியனின் நகர்வை வைத்தே ஒவ்வொரு மாதமும் கணிக்கப்படுகிறது. சந்திரன் வீட்டுக்கு சூரியன் வரும் மாதமே ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும்.
இந்த ஆடி மாதத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், மேன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மிதுன ராசி பலன்
மிதுன ராசிக்காரர்களுக்கு எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பகைவர்களின் தொல்லை நீங்கும். வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். தனிப்பட்ட முறையில் செல்வாக்கு உயரும். இடமாற்றம், மனை மாற்றம், உத்தியோக மாற்றம், தொழில் மாற்றம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விரையச் செலவுகள் அனைத்தும் சரியாகும். செலவாக இருந்த காலகட்டங்கள் நீங்கி பண வரவு அதிகரிக்கும்.
அபாயம்
பூர்வீகத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். வண்டி வாகனம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. இல்லையெனில் பிரச்சனைகளில் மாற்றும் அபாயம் உள்ளது. செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது, போதை வஸ்துகளைப் பயன்படுத்தி வாகனத்தை ஓட்டுவது கூடாது. சனி வக்கிரத்தில் இருப்பதால் மிகுந்த எச்சரிக்கை தேவை.
மண் பொன்னாகும்
மண் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பண வரவு உண்டாகும். வீடு, நிலம், கனிமம் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு யோகமான காலகட்டமாக
இருக்கும். ஜாக்பாட் அடிக்கும் காலகட்டமாக இருக்கும். திடீர் பயணங்கள் அனுகூலத்தை தரும். தொடர்ச்சியாக இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் படிப்படியாக நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
கவனம்
சூரியன், புதன் சேர்க்கை இருப்பதால் வாக்குகள், பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. கோபமாகப் பேசுவது, கெட்ட வார்த்தை பேசினால் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். மிதுன ராசிக்கார பெற்றோர் குழந்தைகளிடம் கோபமாகப் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. கிரெடிட் கார்டு, பணம், கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனை, கோர்ட்டு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.
மகிழ்ச்சி கூடும்
உங்களை எதிரியாக நினைத்தவர்கள் இனி உங்களிடம் இணக்கமாகவும், நட்பாகவும் மாறுவார்கள். சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் படிப்படியாகத் தீரும். பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும். தைரியம், தன்னம்பிக்கை ஏற்படும் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
திடீர் ஜாக்பாட்
ராகு 10 ஆம் இடத்தில் இருப்பதால் திடீர் ஜாக்பாட்டுகள் உண்டாகும். பண வரவுக்கான உத்திரவாதம் கிடைக்கும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். கடல் கடந்து வரக்கூடிய வேலை, வியாபாரம், பயணம் தொடர்பான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. முன்னேற்றம் மிகுந்த காலகட்டமாக இருக்கும்.
ஆரோக்கியம், வழிபாடு
காது, மூக்கு, தொண்டை, மயக்கம், வெர்டிகோ போன்ற பிரச்சனைகளில் கவனமாக இருப்பது நல்லது. சிவன் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். சிவமந்திரங்களை தினந்தோறும் ஜெபிப்பது நல்லது. இந்திராட்சி கவசம் கேட்பது யோகத்தையும், எடுத்த காரியங்களில் நன்மையை ஏற்படுத்தும்.
-
2026 குருப்பெயர்ச்சி: கடக ராசிக்கு குருப்பெயர்ச்சியில் கிடைக்கும் 5 பெரிய அதிர்ஷ்டங்கள்! -
2026 குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையை மாற்றும் காலம் ஆரம்பம்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications