கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்.. கன்னி ராசி இனி ஓஹோன்னு வாழ்க்கை மாறப்போகுது
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கன்னி
உத்திரம், அஸ்தம், சித்திரை ஆகிய 3 நட்சத்திரங்கள் 9 பாதங்களைக் கொண்டது கன்னி ராசி. ராசியின் அதிபதி புதன். இந்த மாதத்தில் வருடங்கள் என்று சொல்லக்கூடிய சனி, ராகு, கேது ஆகிய கிரகங்கள் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால், குரு 10 ஆம் இடத்தில் இருக்கிறார். குரு பத்தாம் இடத்தில் இருந்தாலும் தொழிலில் நல்ல மாற்றம் அமையும். புதிய வேலை அமையக் கூடிய வாய்ப்புள்ளது.
போட்டிகளில் வெற்றி
இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் சனியும், ராகுவும் இருப்பதால் எல்லாவிதமான போட்டிகளிலும் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்கு 2, 9க்கு அதிபதியான சுக்கிரன் 8 ஆம் இடத்தில் மறைந்திருப்பதால் பெரிய விசேஷம் இல்லை என்றாலும், அவருடைய ஸ்தானத்தை அவரே பார்க்கிறார்.
ஏற்றம், பாக்கியம்
ஜூன் 29 ஆம் தேதிக்குப் பிறகு உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்திலேயே சுக்கிரன் வருவது பெரிய ஏற்றத்தைக் கொடுப்பார். திடீர் பாக்கியத்தைக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த மாதத்தில் புதன் உங்கள் ராசிநாதன் பத்தாம் இடத்தில் இருப்பதால் பெரிய நல்ல நன்மைகள் உண்டாகும். நீங்கள் செய்யும் வேலைகளில் என்னவிதமான பிரச்சனைகள் வந்தாலும் சுமூகமாக நீங்கள் சமாளிக்கும் வாய்ப்பு உண்டு.
வெற்றி
புதன் 11 ஆம் இடத்தில் ஜூன் 22 ஆம் தேதிக்கு வருகிறார். 11 ஆம் இடத்தில் லாப ஸ்தானத்தில் ராசிநாதனே இருப்பதால் எடுக்கும் முடிவுகள் அத்தனையும் வெற்றியைக் கொடுக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் நல்ல ஏற்றங்கள் உண்டாகும். எடுத்த காரியங்கள், வேலைகளில் வெற்றிகளில் முடியும். உங்களுடைய ஆசைகள் அத்தனையும் நிறைவேற்றக் கூடிய காலகட்டமாக இருக்கும்.
வெளிநாடு செல்லும் யோகம்
ஆனி மாத்தில் ராசிக்கு 12 ஆம் இடத்தில் செவ்வாயும், கேதுவும் இருப்பதால் தூக்கத்தைக் கெடுக்கும் வாய்ப்புள்ளது. அயன சயன போகத்தைக் கெடுக்கிறார். 8 ஆம் அதிபதி 12 ஆம் இடத்துக்கு சென்றுள்ளதால் வெளியூர், வெளிநாடு, வெளிமாநிலம் செல்லக்கூடிய பாக்கியம் உண்டாகும். குடும்பத்தை விட்டு பிரிந்து போகக்கூடிய கட்டாயம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்
ஜூன் 20 முதல் 22 ஆம் தேதி வரை சந்திராஷ்டம காலமாகும். சந்திராஷ்டம நாட்களில் பயணத்தையும், புதிய முயற்சிகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. சந்திராஷ்டம தினங்களில் அருகில் இருக்கும் கோவிலில் பச்சரிசி, நெல் தானமாக கொடுப்பதன் மூலம் சந்திராஷ்டமத்தின் தாக்கம் நிச்சயமாக குறையும். திடீர் பண வரவுகள் உண்டாகும். பாக்கியங்கள் கிடைக்கும்.
லாபம், சுபச்செலவு
வெளிநாடு சென்று படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஜூன் 29 ஆம் தேதிக்குப் பிறகு கண்டிப்பாக செல்லும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் அபரிமிதமான லாபங்கள் கிடைக்கும். சுபச்செலவுகள் உண்டாகும். தூக்கம் கெடக்கூடிய நல்ல வெற்றிச் செய்தி தரக்கூடிய மாதமாக அமையும். அருகில் இருக்கும் நவநீத கிருஷ்ணருக்கு கோயிலுக்குச் சென்று வருவது மாற்றத்தையும், ஏற்றத்தையும் உண்டாக்கும்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
துலாம் ஜூன் மாத ராசிபலன் 2026: காதல், திருமணம், பணவரவில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது! -
ஜூன் முதல் 20 நாட்கள் கவனம்.. கோபம் கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம்..குரு சுக்கிரன் அருளால் பணமழை -
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள்












Click it and Unblock the Notifications