சிம்ம ராசிக்கு தொழிலில் அற்புதமான மாற்றம்.. தொட்டதெல்லாம் ஹிட்டு.. ஒரு விஷயத்தில் ரொம்ப ஜாக்கிரதை
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சிம்மம்
மகம், பூரம், உத்திரம் ஆகிய 3 நட்சத்திரங்கள் 9 பாதங்களைக் கொண்டது சிம்ம ராசி. ராசியின் அதிபதி சூரியன். ராசிக்கு 11 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். இந்த மாதத்தில் சனி, ராகு சமசப்தமத்திலும், கேது உங்கள் ராசியிலும் இருப்பது விசேஷத்தைக் கொடுக்காது. ஆனாலும் குரு உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருப்பதன் மூலம் ஏற்றமான காலத்தைக் கொடுக்கக்க கூடிய காலகட்டமாக இருக்கும்.
திருமணம்
நீண்டநாட்களாக திருமணத்துக்காக காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். 7 ஆம் இடத்தின் அதிபதி 7 ஆம் இடத்தில் இருப்பதும், குருவின் பார்வையும் இருப்பதால் கண்டிப்பாக திருமண பாக்கியம் கைகூடும். எதிர்பாலினத்தவரை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது. கூட்டுத் தொழில் இருப்பவர்களும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
ஏற்றம்
உங்கள் ராசிக்கு 9 ஆம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பொது காரியங்களில் அதிகளவில் ஈடுபடுவீர்கள். நல்ல தொழில் அமையக்கூடிய வாய்ப்பு இருக்கும். வேலையில் பின்னடைவு ஏற்படும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலகட்டமாக அமையும். செவ்வாய் ராசியில் இருப்பது கேதுவுடன் சேர்ந்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளைச் சந்திப்பீர்கள்.
ஆரோக்கியம்
உங்களுடைய சுகங்களை கெடுக்கும். தாயின் உடல்நிலையில் பின்னடைவை கொடுக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. தந்தையின் உடல்நிலையில் நல்ல ஏற்றம் உண்டாகும் வாய்ப்புள்ளது. 11 ஆம் இடத்தில் சூரியன், புதனும் சேர்ந்திருப்பது நன்மையைத் தரும். உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் இருக்கும் புதனும் 12 ஆம் இடத்துக்கு வருவது நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும்.
பயணம்
வெளிநாடு, வெளிமாநிலம், வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும். செலவுகள் அதிகமாக இருப்பதற்கான வாய்ப்புள்ளது. சனியும், செவ்வாயும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நேருக்கு நேர் பார்த்துக் கொள்வது அந்த அளவுக்கு விசேஷத்தைக் கொடுக்காது. உடல்நலத்தில் பின்னடைவு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. மருத்துவமனைக்குச் செல்லும் வாய்ப்புகளும் ஏற்படும். கூட்டுத் தொழிலில் பின்னடைவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
நல்ல எண்ணம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 10 ஆம் அதிபதி 9 ஆம் இடத்தில் இருக்கிறார். இதனால், அரசியல் அரசு சம்பந்தமான, ஹெச்ஆர், லீடர்ஷிப்பில் இருப்பவர்கள், தங்க நகைக் கடை வைத்திருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலமாக இருக்கும். இந்த மாதத்தில் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகு பார்ட்னர்ஷிப் விஷயத்தில் பின்னடைவை கொடுத்தாலும் அபரிமிதமான நல்ல எண்ணங்களைக் கொடுத்து, விரிவுபடுத்தக் கூடிய வாய்ப்பைக் கொடுக்கும் காலகட்டமாக இருக்கும்.
வெற்றி மேல் வெற்றி
முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையும் காலகட்டமாக இருக்கும். இருப்பினும், சந்திராஷ்டம நாட்களில் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. அப்படி செய்தே ஆக வேண்டும் என்றால் அருகில் இருக்கும் விநாயகருக்கு பால் அபிஷேகத்துக்கு கொடுத்துச் செல்வது நல்லது. எதிர்பாலினத்தவரோடு எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
தொழிலில் ஏற்றம்
தொழிலில் நல்ல ஏற்றம் உண்டாகும். படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மிகப்பெரிய ஏற்றம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தேவையற்ற செலவுகள் இருக்கும். ஆனால் அது சுப செலவாக இருக்கும். அரசியல், அரசு செல்வாக்கு மிகுந்தவர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. ஜூன் 14 முதல் 18 ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை தோறும் கோதுமை தானம் கொடுப்பது நன்மை பயக்கும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications