விருச்சிக ராசிக்கு குஷியான காலகட்டம்.. தொட்டதெல்லாம் தங்கமாகும் யோகம்.. கொடுக்கல், வாங்கலில் கவனம்
ஆனி மாத பலன்: விசுவாவசு வருடம், ஜூன் 15 ஆம் தேதி முதல் ஜூலை 16 ஆம் தேதி வரையிலான ஆனி மாதத்தில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், அதிர்ஷ்டங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
உத்திராயணத்தின் 6 வது மாதம் கடைசி மாதம் ஆனி. பொதுவாகவே மாதாந்திர கிரகம் என்று சொல்லக்கூடிய சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய 4 கிரகங்களின் மாற்றத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வதை வைத்து மாதத்தை நிர்ணயம் செய்வோம்.

இந்த ஆனி மாதத்தில் மேஷ ராசியில் சுக்கிரனும், மிதுனத்தில் புதன், குரு, சூரியன் ஆகிய 3 கிரகங்களும், சிம்மத்தில் செவ்வாய், கேது ஆகிய கிரகங்களும், கும்ப ராசியில் சனி, ராகு ஆகிய கிரகங்கள் உள்ளன. மொத்தத்தில் இந்த ராகு கேதுவில் எல்லா கிரகங்களும் அடங்கியுள்ளன. நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் வெளிநாட்டு சக்திகள் எடுத்துக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
இந்த காலகட்டத்தில் நாம் போடக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியைத் தரக்கூடிய காலகட்டமாக இருக்கும். ஜூன் 22 ஆம் தேதி புதன் மிதுனத்தில் இருந்து கடகத்திற்குப் போகிறார். 29 ஆம் தேதி சுக்கிரன் சொந்த வீட்டுக்கு ஆட்சிக்குப் போகிறார். இந்த ஆனி மாதத்தில் இவை இரண்டும் தான் பெரிய கிரக மாற்றமாக உள்ளன. மற்றபடி அனைத்து வருட கிரகங்களும் அந்தந்த இடத்தில் உள்ளன.
இந்த ஆனி மாதத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஏற்படப் போகும் அதிர்ஷ்டங்கள், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
விருச்சிகம்
உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் தற்போது 10 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்களுடைய அந்தஸ்து, புகழ் கூடும். பத்தாம் அதிபதியான சூரியன் 8 இல் இருப்பதால் ஒரு விஷயத்தை அடைவதற்கான நீங்கள் கொடுக்கும் விலை அதிகமாக இருக்கும். பண வரவு நன்றாக இருக்கும். அதற்குமேல் உங்களுக்கு மேல் செலவுகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளது.
வெற்றி
நீங்கள் முயற்சி எடுத்துக் கொண்டே இருப்பது நல்லது. அதன் மூலம் நன்மைகள் உண்டாகும். ஒவ்வொரு காரியத்திலும் ஒருமுறைக்கு இருமுறை இறங்கினால் மட்டும்தான் அது நடக்கும். சனி இருப்பதால் எந்தவொரு விஷயத்தை எடுத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். ஆனால் அது மிகவும் தாமதமாக கிடைக்கும். விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் உண்டாகும்.
திருமணம்
தாயின் உடல் நலன், உங்களுடைய உடல்நிலையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. காதல் விஷயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் திடீரென மகிழ்ச்சியான திட்டங்களை இடுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.
குழந்தை பாக்கியம்
5 ஆம் அதிபதியான குரு 8 ஆம் இடத்தில் இருப்பதால் யூக வணிகங்களில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருப்பவர்கள் பொறுமையாக, நிதானமாக இருப்பது நல்லது. குழந்தைகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகும். குழந்தைகளை விட்டு நீங்கள் பிரிந்திருக்க வேண்டிய காலகட்டம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது.
உத்தியோகம்
நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சாதிக்க வேண்டிய அனைத்தையும் சாதிப்பீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நீங்கள் செய்யும் வேலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். அரசுத் துறை, தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும்.
தொழிலில் முன்னேற்றம்
சக ஊழியர்கள், மேலதிகாரிகள் பெரிய அளவில் உதவமாட்டார்கள். பணிப் பளு, வேலை அழுத்தம் உண்டாவதற்கான வாய்ப்புள்ளது. ஆனாலும், சனி 5 ஆம் இடத்தில் இருப்பதால் வேலையை விடும் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 8 ஆம் இடத்தில் சூரியன், குரு இருப்பதால் உழைப்பு மற்றவர்களுக்கு பயன்படும். பணம் யாருக்காவது கொடுத்திருந்தால் அந்தப் பணம் அங்கேயே லாக் ஆவதற்கான வாய்ப்புள்ளது.
புகழ், அந்தஸ்து
அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நட்பு வட்டாரம் பெரிய அளவில் விரிவடையும். நல்ல நண்பர்களால் ஏற்றம், முன்னேற்றம் உண்டாகும். 8 ஆம் தேதிக்குப் பிறகு அற்புதமான ஏற்றத்தைப் பெறுவீர்கள். கலைத் துறையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து உண்டாகும். வருமானங்கள் கூடும். ஏற்றுமதி செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். குலதெய்வத்தை வழிபடுவது அற்புத பலன்களைத் தரும். துர்கை, காளி வழிபாடு மேன்மையைக் கொடுக்கும்.












Click it and Unblock the Notifications