Dhanusu Rasi Palan: தனுசு ராசிக்கு நட்பால் வரப்போகும் ஆபத்து.. முக்கிய மாற்றம் நிகழப்போகுது
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் தனுசு ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு அதிபதியாக இருக்கக்கூடிய குரு பகவான் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய நட்பாக பழகுபவர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். பகைவர்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. ஆனால் நண்பர்களிடம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வியாபார ரகசியங்களை யாரிடமும் பகிராமல் இருப்பது நல்லது. வியாபாரம் தொடங்கிய பின்னர் தான் உங்களுக்கே தெரியவரும். ரகசியமாக வைத்துக் கொள்ளாமல் வெளியில் சொல்வதால் பாதிப்புகளை சந்திப்பீர்கள்.
சொத்துகள் வாங்கும் யோகம்
தொழில் ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக வேலை செய்பவர்கள் என அனைவருமே புதிய நட்பை தவிர்ப்பது நல்லது. சனி பகவான் 4 ஆம் இடத்தில் வக்கிரமாக இருப்பதால் சொந்த வீடு வாங்கும் யோகம் உண்டாகும். கடன் பட்டாவது வாங்குவீர்கள். அசையும், அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டு. பயணங்களின் போது மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. விலையுயர்ந்த பொருள்களை வீட்டில் வைத்திருக்காமல் இருப்பது நல்லது. திருடு போவதற்கான வாய்ப்புள்ளது.
புதிய தொழில் தொடங்கும் யோகம்
பயணம் செய்யும் வாய்ப்பு வரும் என்பதால் வாகனங்களை பழுது பார்த்துவிட்டு எடுத்துச் செல்வது நல்லது. 10, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குரூப் ஸ்டடியை தவிர்ப்பது நல்லது. வெளிநாட்டில் வசித்திருப்பவர்கள் சொந்த வீடு வாங்குவது உகந்தது இல்லை. செவ்வாய் 10 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் புதிய தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும். செக்யூரிட்டி நிறுவனம், புலனாய்வு நிறுவனம், புதிய தொழில் நிறுவனங்களை ஆரம்பிக்கும் யோகம் உண்டு.
திருமணத்தில் கவனம்
நல்ல பணியாளர்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கையில் மிகுந்த கவனமாக இருப்பது நல்லது. தோழிகளுடன் நட்பு வைக்கும்போது மிகுந்த கவனம் தேவை. சமூக வலைதளங்களில் பழகுபவர்களிடம் ஏமாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஆன்லைன் திருமண விளம்பரங்களை நம்பி மோசடிகளில் சிக்கும் வாய்ப்புள்ளது.
தொழில்
7 ஆம் இடத்தின் அதிபதி புதன் பகவான் 8 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் தொழிலில் இருக்கும் பிசினஸ் பார்ட்னர் பிரிந்து செல்வதற்கான வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான வரன்கள் கூடி வரும். வரன்கள் விஷயத்தில் கிடைக்கிற வரனை தேர்ந்தெடுக்காமல் தீர விசாரித்து திருமண பேச்சுவார்த்தையை தொடங்குவது நல்லது. இல்லையெனில் பாதியில் திருமணம் நிற்பதற்கான வாய்ப்புள்ளது. அஷ்டமாதிபதி சந்திரன் பயணிப்பதால் தாயின் உடல்நலனில் அக்கறை செலுத்துவது நல்லது.
சிக்கல்
சூரிய பகவான் 8 ஆம் இடத்தில் இருக்கிறார். வரும் 17 ஆம் தேதி 9 ஆம் இடத்துக்கு வருவதால் தந்தையின் உடல்நிலையில் கவனமாக இருப்பது நல்லது. 9 இல் சூரியன், 10 இல் செவ்வாய் இருக்கும்போது சிலருக்கு அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசு அலுவலர்கள், அதிகாரிகள் பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புள்ளது. வேலையில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது. பதவி உயர்வு கிடைக்கும் ஆனால் இடமாற்றமும் சேர்ந்து வருவதற்கான வாய்ப்புள்ளது.
வழிபாடு
சுக்கிர பகவான் 7 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் திருமணச் செய்தி கூடிவரும். செவ்வாய் 10 ஆம் இடத்தில் இருப்பதால் பலருக்கு வேலைமாற்றம் ஏற்படும். பல நன்மைகள் தேடி வரும் மாதமாக இந்த மாதம் அமையும். மடப்புரம் காளியை வழிபடுவது நன்மைகளைத் தரும்.
-
Kumbam: கும்ப ராசிக்கு ஜூனில் வரும் திருப்புமுனை.. குருவின் அருளால் அற்புத யோகம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி!












Click it and Unblock the Notifications