ஆகஸ்ட் மாத பலன் 2025: கடக ராசிக்கு புது கார், புது வீடு வாங்கும் யோகம்.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம்
ஆகஸ்ட் மாத ராசி பலன் 2025: ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த அற்புதமான ஆகஸ்ட் மாதத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் முடிந்து ஆகஸ்ட் மாதம் பிறக்கவுள்ளது. இந்த மாதம் மிதுன ராசியில் குரு பகவானும், சுக்கிர பகவானும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி வரை இணைந்து இருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மகாலட்சுமி வழிபாடு செய்வது அற்புதமான மாற்றங்களை கொடுக்கும். நாச்சியார் திருமொழி கேட்பது, படிப்பது வெற்றியைத் தரும்.

தற்போது கடக ராசியில் இருக்கும் புதன் பகவான் சிம்ம ராசிக்குள் பிரவேசமாகியிருக்கிறார். சுக்கிர பகவான் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு வருகிறார். கன்னியில் செவ்வாய், கும்பத்தில் ராகு, மீனத்தில் சனி பகவான் வக்கிரமாக இருக்கிறார். அந்த வகையில், இந்த ஆகஸ்ட் மாதத்தில் கடக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், தெய்வ வழிபாடுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு ராசிக்கு அதிபதியானவர் சந்திர பகவான். உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பீர்கள். அன்பிற்கு அடிமையாகக் கூடிய நபர்களாக இருப்பீர்கள். கடக ராசியில் புதன் பகவான் அமர்ந்திருக்கிறார். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் வரும் கவனமாக இருப்பது நல்லது. புதிய ஆட்களை நம்பி வியாபாரத்தை தொடங்காமல் இருப்பது நல்லது. எந்த விஷயத்தையும் தீர யோசித்துவிட்டு பிசினஸில் இறங்குவது நல்லது.
மாணவர்கள்
படிக்கும் மாணவர்களுக்கு குழப்பங்கள் ஏற்படும். குழப்பத்தை விட்டுவிட்டு நன்றாக படிப்பது நல்லது. பிரம்ம முகூர்த்தத்தில் படிப்பது நன்மையை ஏற்படுத்தும். புதன் பகவான் ராசியில் உட்கார்ந்திருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும் என்பதால் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும். 2 ஆம் இடத்தில் கேது இருப்பதால் கோபம் அதீதமாக வரும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது.
பிரச்சனைகள் தீரும்
இதுவரை பணம், தொழில், வியாபாரத்தில் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் சந்தித்து வந்திருப்பீர்கள். இனிமேல் அந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பிள்ளையாரை கும்பிடுவது மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படும். சூரிய பகவான் ஆகஸ்ட் 17 ஆம் தேதி 2 ஆம் இடத்துக்கு வந்த பின்னர் உங்களுக்கு நிம்மதி உண்டாகும். பண வருமானம் விஷயங்களில் மாற்றம் வரும். அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் சிக்கல்களில் சிக்கும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தொழில்
செவ்வாய் பகவான் 3 ஆம் இடத்தில் அமர்ந்துள்ளார். அலைந்து திரிந்து செய்யும் தொழில் அமைப்புகள் ஏற்படும். பஞ்சாமதிபதி லாபத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகள் வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டாகும். சுக்கிரன் 4 இல் மறைந்திருக்கிறார். வீடு மாற்றம், கார் மாற்றம் செய்யக்கூடிய வாய்ப்பு வரும். பாதகாதிபதி சுக்கிரன் 12 இல் மறைவது யோகத்தைக் கொடுக்கும். நல்ல விஷயங்களுக்காக நிறைய செலவு செய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும்.
சொத்துகள் வாங்கும் யோகம்
புதிய சொத்துகள் வாங்குவது, கார் வாங்குவது போன்ற யோகம் உண்டாகும். 6 ஆம் இடத்தில் இருக்கும் குரு பகவான் 12 ஆம் இடத்தில் இருப்பது சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். உடல்நலனில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. சனி பகவான் 9 ஆம் இடத்தில் அமர்ந்திருப்பதால் 2 ஆவது திருமணத்திற்கு முயற்சிக்காமல் இருப்பது நல்லது.
கவனம்
சனி வக்கிரமாக இருப்பதால் 2 வது திருமணம் செய்ய ஏற்ற நிலை இல்லை. திருமணத்திற்குப் பொருத்தம் பார்ப்பது, முகூர்த்தம் குறிப்பது போன்றவற்றில் மிகுந்த கவனம் தேவை. புதிய நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் வேலை மாற்றம் செய்வீர்கள். இந்த மாதம் உங்களுக்கு நன்மைகள் பெருக ரங்கநாதர் வழிபாடு செய்வது நன்மை பயக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications