Diwali Rasi Palan: கும்ப ராசிக்கு குருவின் அருளால் கூரையை பிச்சுகிட்டு கொட்டும் பணம்
தீபாவளி சிறப்பு பலன்: மக்கள் மனதில் இன்ப ஒளியை பரப்பும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்திய மக்களின் கலாச்சாரம், நம்பிக்கையில் தீபாவளி மிகவும் பிணைந்துள்ளது. இந்த பண்டிகையை சென்டிமென்டாக பார்த்து பல நல்ல விஷயங்களை தொடங்கும் மக்களும் உள்ளனர். 2025 தீபாவளி பண்டிகையில் கும்ப ராசிக்கு எப்படி இருக்கும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. நம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கும், அதிக உற்சாகத்துடன் கொண்டாடும் ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி தான். இந்த ஒரு பண்டிகைக்காக வருடம் முழுவதும் காத்திருப்பவர்களும் உள்ளனர். மிகவும் நல்ல நாள் என்பதால் பலர் இந்த நாளில் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

தீபாவளி பலன்கள்
ஐப்பசி மாதத்திற்குள்ளும் அடியெடுத்து வைக்கிறோம். இந்த காலத்தில் கிரக நிலைகளில் ஆங்காங்கே மாற்றங்களும் ஏற்படும். இந்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எந்த ராசிக்கு என்ன மாதிரியான நற்பலன்களை கொடுக்கும், எந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்ப்போம். இதில் கும்ப ராசிக்கான தீபாவளி பலன்களை காணலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிநாதன் சனி பகவான் 2 ஆம் இடத்தில் வக்கிரமாக இருக்கிறார். பணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். 2, 11க்கு உடைய குரு பகவான் 6 ஆம் இடத்தில் உச்சமடைவதால் வீடு, மாடு, மனை வாங்கும் யோகம், வேலை போன்ற யோகங்கள் உண்டாகும். புதிய வேலைகள் கிடைக்கும். ஏற்கனவே உள்ள நிறுவனத்தில் புதிய பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.
தன லாபம்
2க்கு உடையவர் உச்சமடைவதால் தன லாபங்கள் அதிகரிக்கும். பணம் பல வழிகளில் வரும் யோகம் உண்டாகும். நீங்கள் ஏற்கனவே கொடுத்த பணம் வராமல் இருந்த அந்த பணம் வந்து சேரும். பழைய நிறுவனங்களில் இருந்து வர வேண்டிய செட்டில்மென்ட்கள் வரும். சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். ஏதாவது ஒரு வழியில் பணம் வந்து சேரும் யோகம் உண்டாகும்.
தடைகள் நீங்கும்
படிக்கும் மாணவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். 6 ஆம் இடத்தில் குரு உச்சமடைவதால் நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். 11க்கு உடையவராகவும் இருந்து உச்சம் பெறுவதால் நல்ல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். நண்பர்களால் புதிய தொடர்புகள் உங்களுக்கு ஏற்படும்.
தொழிலில் வளர்ச்சி
6 ஆம் இடத்தில் இருந்து குரு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். நல்ல லாபங்கள் கிடைக்கும். 12 ஆம் இடத்தை குரு பகவான் பார்ப்பதால் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும். அடுத்து தன ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ஆரோக்கியம்
4, 9க்கு உரிய சுக்கிர பகவான் ஆட்சி பெறும்போது மனைவியோடு பிரச்சனைகள், சங்கடங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. மனைவி உங்களை சங்கடப்படும் சூழல்கள் ஏற்படும். தாய், தந்தையை விட்டு பிரியும் வாய்ப்புள்ளது. தோல், கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
வெளிநாடு யோகம்
7க்கு உரிய சூரியன் மறைந்திருப்பதால் வெளிநாட்டு யோகங்கள் மறைந்ததால் இதுவரை வெளிநாட்டு யோகங்கள் தடைபட்டிருக்கும். இனி அந்த நிலைமைகள் மாறும். செவ்வாய் பகவானும் ஆட்சி பெறுவதால் தீயணைப்புத் துறை, காவலர் பணி, ராணுவப் பணி போன்றவை கிடைக்கும் யோகம் உண்டாகும்.
-
Magaram: மகர ராசிக்கு 30 நாட்களில் நடக்கும் அதிசயம்.. தொழிலில் வரப்போகும் சூப்பர் மாற்றம் -
தனுசு ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. உச்ச குருவால் வரப்போகும் 5 அதிர்ஷ்டங்கள் -
Rasi Palan This Week: மகரத்திற்கு வெற்றி மேல் வெற்றி!.. ஜூன் 8 - 14 வார ராசிபலன் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு எதிர்பாராத பணவரவு.. 7 நாட்களில் வரப்போகும் நல்ல மாற்றம் -
கண்ணா 2 லட்டு திண்ண ஆசையா.. விருச்சிகத்துக்கு இந்த வாரம் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு தொழிலில் அடிக்கும் ஜாக்பாட்.. தொட்டது துலங்கும் அற்புத காலம் -
லக்கி பாஸ்கராகப் போகும் கன்னி ராசியினர்.. இந்த வாரத்தில் வரப்போகும் குட்நியூஸ் -
Rasi Palan This Week: சிக்கலில் சிக்கும் சிம்ம ராசி.. கவனமாக இருக்க வேண்டிய 3 விஷயம் -
Rasi Palan This Week: குரு சுக்கிரன் அருளால் கடக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பணத்துக்கு பஞ்சமில்லை -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு பேச்சுதான் பிரச்சனையே.. இந்த விஷயங்களில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடி.. கவனம் அவசியம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு இந்த வாரத்தில் வரும் அதிர்ஷ்டம்.. பணவரவு கொட்டும்











Click it and Unblock the Notifications