மரகம், கும்பம், மீனம் ராசிக்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. குரு அதிசாரப் பெயர்ச்சியில் சூப்பர் மாற்றங்கள்

Subscribe to Oneindia Tamil

குரு அதிசாரப் பெயர்ச்சி: கடகத்தில் இருந்து குரு பகவான் அதிசாரமாக சிம்மத்திற்கு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சி நிகழ்வால் மகரம், கும்பம், மீனம் ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

கடகத்தில் இருக்கும் குரு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு சிம்மத்திற்கு வருகிறார். மீண்டும் வக்கிரமாகி பின்னோக்கி கடகத்திற்குச் செல்வார். இந்த நிகழ்வே குரு அதிசாரப் பெயர்ச்சி என்று அழைக்கப்படுகிறது. சுமார் 90 நாட்கள் அதிசாரம் நடக்கும். 9 கிரகங்களுக்கும் அதிசாரம் நடைபெறும். இந்த கிரக மாற்றத்தின்போது 12 ராசிகளுக்கும் பல்வேறு பலன்கள் கிடைக்கும்.

guru-adhisara-peyarchi-2026-magaram-kumbam-meenam-rasi-to-gain-wealth-career-growth-and-good-for

அக்டோபர் 31 ஆம் தேதி பகல் 12.05 மணிக்கு குரு அதிசாரமடைகிறார். ஜனவரி 25 ஆம் தேதி இந்த நிகழ்வு நிறைவடைகிறது. அதன்படி, இந்த 3 மாதங்களில் குரு அதிசாரப் பெயர்ச்சியால் மகரம் ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வம், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம் ராசி பலன்

மகர ராசியினருக்கு அஷ்டமத்தில் குரு போகிறார். 8க்கு குரு போகும்போது நிறைய நன்மைகள் கிடைக்கும். நல்ல ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். தொலைதூரப் பயணங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு சுற்றுலா செல்வதற்கான அமைப்பு உள்ளது. நீண்ட நாள் செல்ல வேண்டும் என்று நினைத்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரும் அமைப்பு.

பங்குச்சந்தை, மியூட்சுவல் ஃபண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். 8 ஆம் இடம் என்பது லாட்டரியில் பரிசு பெறுவதற்கான வாய்ப்புள்ளது. திடீர் அதிர்ஷ்டம் பெறுவீர்கள். எதிர்பாராத வேலை அமைவது, வரன் அமைவது போன்ற யோகம் உண்டாகும். திடீர் திருப்பங்கள், திடீர் நன்மைகள் நடக்கும். அதிர்ஷ்டம் பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

இரண்டாவது வருமானம் வேண்டும் என்று நினைப்போருக்கு அதற்கான அமைப்பு உள்ளது. துணை வருமானங்கள் உருவாகும் காலகட்டமாக இருக்கும். அதிக லாபம் கிடைக்கும். 8 ஆம் இடத்துக்கான அமைப்பு உள்ளது. தொழில் செய்பவர்களின் தொடர்புகள் கிடைக்கும். நிறைய மக்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வம்பு, வழக்குகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள்.

திருமண யோகம் உண்டு. குடும்பம் விரிவடையும். கலப்புத் திருமணங்களுக்கான அமைப்பு உள்ளது. காதல் திருமணத்திற்கு கிரீன் சிக்னல் கிடைக்கும். ஏற்கனவே பார்த்த வரன்கள் மீண்டும் அமைவதற்கான பாக்கியம் உண்டு. உயரமான இடங்கள், மலையேறுவது, சாகசப் பயணங்களில் ஈடுபடுவது, வாகனங்களில் வேகமாகச் செல்வது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. கூர்மையான ஆயுதங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசியினருக்கு 7 ஆம் இடத்துக்கு குரு பகவான் வருகிறார். இதுவரை உடல்நலக் குறைபாடு, வயிறு சார்ந்த உபாதைகளால் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் மாறும். 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நரம்பு தொடர்பான பாதிப்புகள் எல்லாம் இனி பரிபூரணமாக நீங்கும். வரும் 3 மாதத்தில் ஆரோக்கியத்தில் இருந்து குறைபாடுகளுக்கான சிகிச்சைகளைப் பெறுவது ஏற்றத்தைத் தரும்.

மன ரீதியிலான அழுத்தத்தில் இருந்து நிம்மதி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். அன்றாட வாழ்க்கையிலுமே உடல்ரீதியான பிரச்சனைகளை அனுபவித்து வந்திருப்பீர்கள் அந்க நிலைமைகள் எல்லாம் மாறும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல ஏற்றம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் நல்ல சம்பளம், நல்ல வேலை என்ற அமைப்பு இருக்கும்.

தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புள்ளது. நல்ல பார்ட்னர்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்தும் அமைப்பு உள்ளது. தொழில், வேலை மூலமாக வெற்றிகள் உண்டாகும். குழந்தை விஷயத்தில் நல்ல நன்மைகள் நடக்கும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புரிதல், பரஸ்பரம் ஏற்படும். குழந்தை பேறுக்கான சிகிச்சைகளில் வெற்றி பெறும் அமைப்பு உள்ளது. இயற்கையாக கருத்தரிக்கும் யோகமும் உண்டு. பிறக்கும் குழந்தை நல்ல நேரத்தில், நல்ல குழந்தையாகப் பிறக்கும் யோகம் உண்டாகும். உங்கள் முன்னோர்களே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார்கள்.

கழுத்தை நெறிக்கும் கடன் அமைப்புகளில் இருப்பீர்கள். கலக்கம், குழப்பம் என்ற நிலைமைகள் இருந்திருக்கும். கணவன், மனைவியைச் சுற்றி நிறைய கண் திருஷ்டி இருக்கும். அதனால், மூன்றாம் நபர்களின் தலையீடு குடும்பத்தில் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சதுர்த்தி தினத்தன்று விநாயகர் கோயிலில் சிதறு தேங்காய் உடைப்பது குறையும்.

மீனம் ராசி பலன்

மீன ராசியினருக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியில் பட்டம், பெயர், புகழ், பணவரவு ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை உண்டாகும். கை நிறைய காசு வரக்கூடிய அற்புதமான காலகட்டம். குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் புரிதல் ஏற்படும். தான், தன் குடும்பத்தைப் பற்றி புரியக்கூடிய காலகட்டமாக இருக்கும். குடும்பத்தைப் பற்றி சிந்திக்கக்கூடிய அமைப்பு ஏற்படும்.

கடனால் நிறைய பாதிப்புகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள். கடன் நெருக்கடி குறையக்கூடிய காலகட்டம். பண விஷயத்தால் இருந்து வந்த மன அழுத்தம் தீரும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் ஏற்படும். வாரா கடன்கள் வசூலாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் கருத்து மோதல், அவர்களுக்கும் உங்களுக்கும் சிறு சிறு மன உளைச்சலாகும். குழந்தைக்காக சிகிச்சை பெறுவோருக்கு சரியான காலகட்டம் இது கிடையாது. 2, 3 மாதங்களுக்கு தள்ளிப்போடுவது நல்லது.

குரு வக்கிரத்துக்கு பஞ்சம ஸ்தானத்தில் உச்சத்துக்கு வரும்போது குழந்தைக்கான சிகிச்சையைப் பெறுவது நன்மை பயக்கும். 10 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் இழந்த பட்டம், பதவி, பொறுப்பும், புகழும் உங்களைத் தேடி வரும். சோஷியல் மீடியாவில் புகழ்வெறும் அமைப்பு உள்ளது. வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு அதற்கான யோகம் உண்டு.

வெளிநாடுகளில் சென்று பிசினஸ் தொடங்குவது, வீடு கட்டுவது, பிஆர் வாங்குவது போன்ற அமைப்பு உள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப காரியத்துக்கான முயற்சிகள் கைகூடும். இருப்பினும், 2, 3 மாதங்களுக்குப் பிறகு செய்வது ஏற்றத்தைத் தரும். வரன்கள் பார்க்கும் முயற்சிகளை இந்த காலகட்டத்தில் செய்யலாம். 11 ஆம் இடத்தில் ராகு வருவதால் லாபம் பெருகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+