"திரும்பி வந்துட்டேன்னு சொல்லு".. தனுசு ராசிக்கு தேடி வரும் அதிர்ஷ்டம்.. வாழ்க்கையே மாறப்போகுது

Subscribe to Oneindia Tamil

குரு அதிசார பெயர்ச்சி 2026: கடக ராசியில் இருக்கும் குரு பகவான் அங்கிருந்து சிம்ம ராசிக்கு அதிசாரமாக செல்கிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியாகும் காலகட்டத்தில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அக்டோபர் 31 ஆம் தேதி கடக ராசியில் உச்சம் பெற்றிருக்கும் குரு பகவான் சிம்ம ராசிக்கு குரு அதிசாரப் பெயர்ச்சியாகிறார். இந்த குரு அதிசாரப் பெயர்ச்சியானது 12 ராசிகளில் சில ராசிக்கு அற்புதமான பலன்களையும், ஒரு சில ராசிக்கு அசுப பலன்களையும் கொடுக்கப் போகிறார். தனுசு, கும்பம், தனுசு, சிம்மம் ஆகிய 4 ராசியினருக்கு பிரம்மாண்ட மாற்றம், முன்னேற்றம் ஏற்படும் காலகட்டமாக இருக்கும்.

guru-adhisara-peyarchi-what-kind-of-benefits-will-dhanusu-rasi-people-get-during-this-period

தனுசு ராசியினருக்கு கண்டிப்பாக மிகப்பெரிய ஜாக்பாட் கிடைக்கும். தனுசு ராசியினருக்கு என்ன விதமான பலன்களை குரு பகவான் கொடுக்கப் போகிறார் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசியினருக்கு கொண்டாட்டமான காலகட்டமாக இருக்கும். பாக்கிய ஸ்தானத்துக்கு குரு பகவான் அதிசாரமாக வருகிறார். நிறைய நன்மைகள் நடக்கக்கூடிய காலகட்டம். தெய்வத்தின் அனுகூலம் பரிபூரணமாக இருக்கும். தெய்வத்தின் அனுக்கிரகம், பெரியவர்களின் அனுக்கிரகம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய அமைப்பு உள்ளது.

வெளிநாடு யோகம்

வெளிநாடுகளில் சிட்டிசன்ஷிப் கிடைக்கக் கூடிய அமைப்பு உள்ளது. நிறைய வழக்குகளில் இருந்து விடுபடுவீர்கள். சொந்த வீடுகள் அமைவதற்கான யோகம் உண்டாகும். நிறைய லோன் கிடைக்கும். ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். ஆண் குழந்தை பிறப்பதற்கான யோகம் உண்டாகும். விளையாட்டுத் துறையில் ஆர்வம் அதிகரிக்கும். பிரிந்த அண்ணன், தம்பிகள் மீண்டும் ஒன்று சேர்வீர்கள். பாசத்தை பொழியக்கூடிய காலகட்டமாக இருக்கும்.

வேலை, தொழிலில் யோகம்

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேரக்கூடிய அமைப்பு உள்ளது. விவாகரத்துப் பெற்றவர்கள் மறுமணமாகக் கூடிய யோகம் உண்டு. கும்பாபிஷேகம் செய்வீர்கள். கோவிலுக்கு தான தர்மங்கள் செய்வீர்கள். ஒரு வேலையில் இருந்து இன்னொரு வேலைக்கு மாறக்கூடிய பாக்கியம் உண்டாகும். புதிய தொழில் ஆரம்பிப்பீர்கள். கன்சல்டன்ஸி, ஆடிட், வழக்கறிஞர் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல காலகட்டமாக இருக்கும்.

குழந்தை பாக்கியம்

ஆன்மீகவாதிகளுக்கு பெரியளவுக்கு யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அப்பாவின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நன்மை பயக்கும். பெரிய அளவுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 95 சதவீதம் நன்மைகள் பெறக்கூடிய அமைப்பு உள்ளது. நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகள் எல்லாம் நீங்கி அற்புதமாக இருப்பீர்கள்.

வெளியில் சொல்லாதீங்க..

நீங்கள் செய்யும் முயற்சிகளை வெளியில் சொல்லாமல் செய்வது ஏற்றத்தைத் தரும். கார் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். எந்த நல்ல விஷயங்களைச் செய்தாலும் வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. விஷ்ணு சஹஸ்ஹர நாமம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும். ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றுவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கடன் தீரும்

கடன்களை அடைத்து முடிப்பீர்கள். திருமண யோகம் உண்டாகும். வேலையில் உயர்வு ஏற்படும். வண்டி, வாகனங்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு அதிகம். எதிர்பார்த்த அனைத்துமே சரியாக நடக்கும். காதல் கைகூடுவதற்கான யோகம் உண்டு. நினைத்தது நிறைவேறக்கூடிய நல்ல யோகம் உண்டு. எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+