குருப்பெயர்ச்சி பலன் 2025: ரிஷபம், சிம்மத்திற்கு சூப்பர் அதிர்ஷ்டம்.. குருவின் அருளால் கொட்டும் யோகம்
குருப்பெயர்ச்சி பலன்: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த குருப்பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷபம், சிம்மம் ராசியினருக்கு குரு பகவானின் பரிபூரண அருள் கிடைக்கப் போகிறது. என்ன விதமான பலன்கள், அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியானது மே 14 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் ரிஷபத்தில் இருந்து குரு பகவான் மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார். அங்கிருந்து குருவின் பார்வை துலாம், தனுசு, கும்பம் ராசியின் மேல் விழுகிறது. குரு சுபத்துவம் முழுமையான பொருந்திய கிரகம். குரு பகவான் தனது சொந்த வீட்டையே பார்ப்பது தான் இந்த குருப்பெயர்ச்சியில் விசேஷம்.

இந்த குருப்பெயர்ச்சியில் அதிர்ஷ்டம், பொருளாதாரம், செல்வம், உயர்வு என அனைத்து விதமான நற்பலன்களையும் சில ராசிகள் பெறப் போகின்றன. அந்த வகையில், ரிஷபம், சிம்மம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
ரிஷபம்
குருப்பெயர்ச்சியில் யோக பலன்களைப் பெறுவதில் முதன்மையான ராசி ரிஷப ராசி. ரிஷபத்துக்கு ஜென்ம குரு. அதாவது ராசியின் மேலேயே குரு பயணிக்க போகிறார். கடினமாக உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி ஸ்மார்ட் ஒர்க் செய்து வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். மரண பயம் பரிபூரணமாக நீங்கும். மன அமைதி உண்டாகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள்.
வெளிநாடு, வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு, பதவி உயர்வில் ஏற்பட்டிருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும். விற்க முடியாத நிலத்தை அதிக லாபத்துடன் விற்கும் காலகட்டமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் தெய்வத்தின் பரிபூரண ஆசிர்வாதம் உண்டாகும். ஆறாம் இடத்தைப் பார்ப்பதால் எதிரிகள் தொல்லை நீங்கும். கடன்களை அடைப்பீர்கள்.
நீண்ட நாட்களாக நோய் நொடியுடன் இருந்தவர்களுக்கு உரிய மருத்துவம் கிடைக்கும். இரண்டாவது சொத்து வாங்குவதற்கான யோகம் உண்டாகும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு நீங்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பை அதிகரிப்பீர்கள். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ரிஷபத்துக்கு 2 ஆம் இடத்தில் வரும் குரு 8 ஆம் இடத்தையும், 6, 10 ஆம் இடத்தையும் பார்ப்பதால் இரண்டு வருமானம், இரண்டாவது சொத்து, திடீர் அதிர்ஷ்டம், தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனியால் அச்சப்படத் தேவையில்லை. 11 ஆம் இடத்தில் குரு வந்து 3 ஆம் இடத்தைப் பார்ப்பதால் நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். தைரியத்தை குரு கொடுப்பார். தைரியம், வீரியம் உண்டாகும். திருமண யோகம், புத்திர பாக்கியம் உண்டாகும். இடமாற்றங்கள் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
குழந்தைகள் கல்வி மாற்றம், இடமாற்றம், வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். 3 ஆம் இடத்தை குரு பார்ப்பதால் ஆவணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும். குலதெய்வ கோயிலை புனரமைப்பது, சீரமைப்பது போன்ற யோகம் உண்டாகும். ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வது, குலதெய்வ வழிபாடு, தீர்த்தங்கள் நீராடுவது, தூர தேச கோயில்களில் வழிபாடு செய்யும் யோகம் உண்டாகும்.
புத்தி, மனதில் உள்ள குழப்பங்கள் அனைத்தும் நீங்கும். பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி குருவின் பூரண அருளும், நன்மையும் உண்டாகும். 9 கிரகங்களில் இயற்கை சுபர் எனும் குரு பார்வை இருப்பதால் விடுதலை உணர்வைப் பெறுவீர்கள்.
-
Guru Peyarchi: கும்ப ராசிக்கு காத்திருக்கும் ஆபத்து.. இந்த விஷயங்களில் மிகுந்த கவனம் அவசியம் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
குருப்பெயர்ச்சி: கடக ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலை, வருமானத்தில் முன்னேற்றம்! -
குருப்பெயர்ச்சி: குருவின் அருளால் ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. வேலையில் முன்னேற்றம் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
குருப்பெயர்ச்சி: மிதுன ராசிக்கு பேச்சில் தான் கண்டமே.. இந்த விஷயங்களை செய்திடவே செய்திடாதீங்க -
Guru Peyarchi: மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும் குருப்பெயர்ச்சி.. வாழ்க்கையை மாற்றும் 3 விஷயங்கள் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications