குரு பார்த்தால் கோடி நன்மை.. குருப்பெயர்ச்சியில் சக்கப்போடு போட போகும் 4 ராசிகள்
குருப்பெயர்ச்சி பலன்கள்: 2025 ஜோதிட ரீதியாக முக்கியத்துவம் பெற்ற வருடம். சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய கிரகங்களின் பெயர்ச்சி இந்த வருடம் உள்ளது. விரைவில் குருப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி குருப்பெயர்ச்சியில் அதிகளவு நற்பலன்களை பெறவுள்ள 4 ராசிகள் குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
குருப்பெயர்ச்சி
ஒவ்வொரு வருடத்துக்கு ஒரு முறை குருப்பெயர்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த 2024 ஆம் ஆண்டு குரு பகவான் ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சி ஆகியிருந்தார். இந்நிலையில் வருகிற 14.5.2025 இரவு 11 மணியளவில் குரு பகவான் ரிஷப ராசியில் இருந்து மிதுனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

4 ராசிகள்
பொதுவாக குரு பகவான் நன்மைகளின் அதிபதி என்றழைக்கப்படுவார். தான் இருக்கும் இடங்களில் அதிகளவு நற்பலன்களை கொடுப்பார். செல்வம், மகிழ்ச்சி, குடும்பம், ஆரோக்கியம் ஆகிய எல்லாவற்றிலும் குரு பகவானின் தாக்கம் இருக்கும். அதனால் தான் குரு பார்த்தால் கோடி நன்மை என்று சொல்வார்கள். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் அதிகளவு அதிர்ஷ்டம் கொட்டும் 4 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷபம் உங்கள் ராசியில் இருந்து விலகி குரு பகவான் இரண்டாம் இடத்துக்கு பெயர்ச்சி ஆகப்போகிறார். உங்களுக்கு சுக்கிரன் தான் ராசி அதிபதி. அவரை குரு பகவான் பார்ப்பதால் அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது. நற்பலன்களால் மனம் மகிழும். பொருளாதாரத்தில் நல்ல ஏற்றம் இருக்கும். சிறப்பான பண வரவால் கடன் சுமை குறையும்.
முன்னேற்றம்
கல்வியில் அதிகளவு முன்னேற்றம் காணப்படும். கல்வி தொடர்பாக எடுக்கும் மாற்றங்கள் சிறப்பாக அமையும். குடும்ப அமைப்பும் நன்றாக உள்ளது. கணவன் மனைவி இடையே மோதல்கள் விலகி அன்யோன்யம் அதிகரிக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். நிலம், வீடு, வாகனம் என்று சொத்துகள் குவியும். தொட்டது துலங்கி எல்லாவற்றிலும் நன்மைகள் மட்டுமே கிடைக்கும்.
மிதுனம்
மிதுனம் குரு பகவான் உங்களின் ஜென்ம ராசிக்குள் வருகிறார். இதன் மூலம் அற்புதமான பலன்களையும், அதிசயங்களையும் சந்திக்கப் போகிறீர்கள். எடுத்த காரியங்களில் ஜெயம் கிடைக்கும். குரு பகவான் நேரடியாக உங்கள் ராசியில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் எல்லாவற்றிலும் பரிபூரண லாபம் கிடைக்கும். பொதுவாக மிதுனம் புதன் பகவானின் ஆட்சியை உச்சம் பெற்ற ராசியாகும்.
லாபம்
குரு மற்றும் புதன் ஆகிய இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் அமர்ந்தால் அவர்கள் உச்சம் பெறுவார்கள். அதன் காரணமாக அடுத்த ஒரு வருடம் மிதுன ராசியினர் எல்லாவற்றிலும் உச்சம் தொடுவார்கள். பண வரவு திருப்தியாக இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அசையும், அசையா சொத்துகள் வந்து சேரும். சுப காரியங்கள் நிகழும்.
துலாம்
துலாம் ராசிக்கு குரு பெயர்ச்சியில் அமோகமான பலன்கள் கிடைக்கும். உத்யோகத்தில் மனதுக்கு பிடித்தபடியான எதிர்பார்த்த மாற்றங்கள் இருக்கும். பண புழக்கம் சிறப்பாக இருக்கும். உத்யோகம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விருத்தியாகும். திடீர் அதிர்ஷ்டங்களால் கோடீஸ்வர யோகம் உண்டாவதற்கான வாய்ப்பும் கூட உள்ளது.
வெற்றி
பொருளதாரத்தில் அடுத்தகட்டத்துக்கு முன்னேறுவீர்கள். தடைகள் நிவர்த்தியாகி எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றிகள் குவியும். புதிய முயற்சிகள் கைக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் நீண்ட கால திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். மன சஞ்சலங்கள் நீங்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
தனுசு
தனுசு ராசி குருப்பெயர்ச்சியில் சிறப்பான பலன்களை பெறப் போகிறது. மிதுனம் ராசியில் இருந்து குரு பகவான் நேரடியாக உங்கள் ராசியை பார்க்கிறார். ஏற்கனவே தனுசு ராசி குரு பகவானின் சொந்த வீடு. குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த ராசியில், அவரின் பார்வையும் நேரடியாக வருவதால் எல்லாவற்றிலும் அதிகளவு நன்மை கிடைக்கும்.
தொழில்
உத்யோகம் மற்றும் தொழிலில் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். கடந்த கால கஷ்டங்கள் தவிடு பொடியாக வாழ்க்கை மொத்தமாக மாறுமளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும். உத்யோகம், தொழில், வீடு, கல்வி ஆகியவற்றில் எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கும். வெளிநாடு சம்பந்தப்பட்ட முயற்சியில் இருப்போருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.












Click it and Unblock the Notifications